உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

263

அதனைத் தாம் இயற்றிய சில நூல்களிடையே நுழைத்துவிட்டு, அதனையுந் தமிழர் எல்லாரும் எளிதிலே நம்பும்படி செய்து தமது கருத்தை நிறைவேற்றிக்கொண்டார்கள்.

இங்ஙனம், இவர்கள் கருத்து நிறைவேறிய பிற்காலத்திற் றோன்றிய உரையாசிரியர்களான இளம்பூரணர், பேராசிரியர், முதலியோர், ஆரியப்

பார்ப்பனர்

நச்சினார்க்கினியர் வழக்கத்திற் கொணர்ந்த இவ்விகழ்ச்சிப் பொய்யுரையை மெய்யென நம்பித், தாம் உரை எழுதுதற்கு எடுத்துக்கொண்ட 'தொல்காப்பியம்' முதலான பழைய செந்தமிழ்த் தனி நூல்களில் வேளாளரைப் பற்றிக் கூறுமிடங்களிலெல்லாம் பிழையான உரைகளை எழுதி விடலானார்கள். இவ் விந்திய நாட்டிற் சரித்திர நூல்களும், அவற்றின் வழியே மெய் இது, பாய் இதுவெனப் பகுத்துக் காணுங் சரித்திர வுணர்வும் இல்லாமையால், ஆரியப் பார்ப்பனர் தமிழ் நன்மக்களைத் தாழ்த்துதற்குச் செய்த இச் சூழ்ச்சிகளை அறியாமல், அவையெல்லாங் கடவுள் வகுத்த ஏற்பாடெனவே நம்பி அவற்றுக்கு மாறாக ஏதுங் கூறமாட்டாராய், நூலாசிரியர் கருத்துக்கு முரணாக அவர்கள் அங்ஙனம் பிழைபட்ட உரைகள் எழுதியது ஒரு வியப்பன் றென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/288&oldid=1592010" இலிருந்து மீள்விக்கப்பட்டது