உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

21. பழைய வேதங்களென்பன

தமிழ் மறைகளேயாம்

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகையுறுதிப் பொருள்களைப் கூறிய பழைய தமிழ் நூல்களே ‘நால்வேதம்’ எனவும், ‘நான்மறை' எனவுந் தமிழ் மொழிக்கண் வழங்கப் பட்டன. பண்டைக்காலத்து வழங்கிய தமிழ் நான்மறைகள் அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நால்வகை யுறுதிப் பொருள்களை உணர்த்து மென்பதும், அவை இறைவனால் ஆலமர நிழலின்கீழ் அருந்தவர் நால்வர்க்கு அறிவுறுத்தப் பட்டன வென்பதும்,

66

ஆல நீழல் அன்றிருந்து அறநெறி

நால்வர் கேட்க நன்கினிது உரைத்தனை"

எனத் திருவெழுகூற்றிருக்கையில் ஆசிரியர் நக்கீரனாரும்,

66

அருந்தவருக்கு ஆலின்கீழ் அறம்முதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கூறிய இயம்பேடீ"

எனத் திருச்சாழலில் மாணிக்கவாசகப் பெருமானும்,

“அன்றாலின் கீழிருந்தங்கு அறம்புரிந்த அருளாளர்”

எனத் திருஞானசம்பந்தப் பெருமானும், "அன்றாலின் கீழிருந்தங்கு அறஞ் சொன்னானை

எனத் திருநாவுக்கரசு நாயனாரும்,

"அன்றாலின் நீழற் கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து"

எனச் சுந்தரமூர்த்தி நாயனாரும் அருளிச் செய்யுமாற்றால் நன்கு விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/295&oldid=1592024" இலிருந்து மீள்விக்கப்பட்டது