உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

275

பாட்டுகள் வேதங்களாக வகுத்து ஒழுங்கு செய்யப்பட்டன வென்னும் வழக்கும், அதுபற்றியே அவர் 'வேதவியாசர்' எனப் பெயர்பெற்றனர் என்பதும் உண்மையாதல் காண்க. இங்ஙனம் பாரதப் போர் நிகழ்ந்த காலத்திற்குப் பின்னே ஆரியமொழிப் பாட்டுகள் இருக்கு எசுர் முதலியனவாகப் பாகுபடுத்தப் பட்டபோதுதான் அவற்றிற்கு 'வேதம்' என்னுங் சொல் சூட்டப் படுவதாயிற்று.

1

இனி, அவ் வேதம் என்னுஞ் சொல் மறைநூல் என்னும் பொருளிற் பாரதப் போர்க்குப் பிற்பட்ட ஆரிய நூல்களிற் காணப்படுதல்போல, அப் போர் நிகழ்ந்த காலத்தும் அதற்கு முன்னுந் தோன்றிய ஆரிய நூல்களிற் காணப்படாதாக அவ் ‘வேதம்’ என்னுஞ் சொல்லும் அதனோடொத்த ‘மறை’ என்னுஞ் சொல்லும் அப்பாரதப்போர் நிகழ்ந்த காலத்தும் அதற்கு மிக முற்பட்ட காலத்தும் எழுதப்பட்ட செந்தமிழ்ப் பாட்டுகளிலே காணப்படுமாயின், அச் சொற்கள் தமிழர்க்கே உரியனவாமென்பது இனிது துணியப்படுமன்றோ? பாரதப் போர் நிகழ்நத காலத்தே முரஞ்சியூர் முடிநாகராயராற் பாடப்பட்ட “மண்டிணிந்த நிலனும்” ' என்னும் மிகப்பழைய செய்யுளில் 'நால் வேத நெறி' என ‘வேதம்' என்னுஞ் சொல்லும் அது நால்வகைத்தாதலுங் குறிக்கப்பட்டமை காண்க. பாரதப்போர் நடைபெற்ற காலத்தில் ஆரியமொழிப் பாட்டுகள் நான்கு கூறாகப் பகுக்கப்படவில்லை யென்பதும், அவற்றிற்கு ‘வேதம்’ என்னும் பெயர் சூட்டப்படவில்லை யென்பதும் மேலே காட்டப்பட்டமையின், அவ் வாரிய மொழி வேதங்களுக்கு பாடப்பட்டதாகிய இச்செந்தமிழ்ப் பாட்டிற் குறித்துரைக்கப்பட்ட ‘நால் வேதங்கள்’ தமிழ்மறைகளே யாதலும், ‘வேதம்' என்னும் பெயர் தமிழ்ச் சொல்லே யாதலும் நன்கு பெறப்படும்.

முன்னே

66

இனிப், பாரதப்போர் நிகழ்தற்குப் பன்னூற்றாண்டுகள் முன்பிருந்த குமரிநாட்டில் அரசுபுரிந்த ‘பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி' யைக் காரிகிழார் பாடிய வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்”2 என்னுஞ் செய்யுளில் “நான்மறை” என்னுஞ் சொற்றொடர் காணப்படுதலின், ஆரிய மொழி வேதங்கள் தோன்றுதற்குப் பன்னெடுங்காலம் முன்னரே தமிழில் நான்கு வேதங்கள் உண்மையும், அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/300&oldid=1592040" இலிருந்து மீள்விக்கப்பட்டது