உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

_

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

வருகின்ற இந்தியரை இவர் தாம் தமிழர் இவர்தாம் ஆரியர் என்று வேற்றுமை இனிது புலனாம்படி பிரித்து வழங்கல் இஞ்ஞான்று ஒரு சிறிதும் ஏலாதாயினும், இக் கட்டுரையில் பண்டை நாளில் வேற்றுமை விளங்க வாழ்ந்த அவ்விரு சாதியாரைப் பற்றியே ஆராயப்புகுந்தே மாகலின் அங்ஙனம் வேறு வேறு பெயர் குறித்துக் கூறல் குற்றமாதல் இல்லை என்க. அது கிடக்க.

ஐரோப்பிய அறிஞர்கள் வடமொழி தென்மொழியில் எழுதப்பட்ட நூலுரைகளின் காலம் வரையறுத்தற் பொருட்டு இடைவிடாது செய்து வரும் பெருமுயற்சிகளால், கிறித்து பிறந்தநாள் தொடங்கி இன்றுகாறும் எழுந்த நூலுரைகளின் காலம் ஒருவாறு துணியப்பட்டு வருகின்றது. சைவ சமயாசிரியரான திருஞானசம்பந்தர் காலம் உறுதிசெய்யப் பட்டமையால், அவர்க்கு முன்னும் பின்னும் மிக ருண்டு கிடந்தநூலுரைகளின் காலம் விளக்கமுற்று வருகின்றன. இவ்வாறே வடமொழியில் மிகச் சிறந்த நல்லிசைப் புலவரான காளிதாசர் முதலியோர் காலம் உறுதிசெய்யப் பட்டமையால் அவர் காலத்திற்கு முற்பிற்பட்ட நூலாசிரியர் உரையாசிரியர் காலம் வரம்பு குறித்துரைக்கப்படுகின்றன. சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு தொடர்புற்றுக் கருகி யிருண்ட கால இருளின் இடையே மறைபட்டுப் புதைந்து கிடந்த நந்தாமணி விளக்காம் அப் பெரியார் காலம், மனவெழுச்சியும் நுண்ணறிவு முடைய சிலரால் அகழ்ந்தெடுத்து உண்மைக் காரணங்களாற் றிரண்ட குன்றின்மேல் வைக்கப்படுதலின் நீண்ட அக்காலவிருள் வலிகுறைந்து வெளிறுகின்றது.

இனி,

னி, இவ்விரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டு இடிந்து வெறும்பாழாய்க் கிடக்குங் கால அரண்மனை வாயிலை அணுகி உட்செல்ல நோக்குகையில், அங்கு மிகப் பரவித்தோன்றும் கரிய இருள் மைச்சேறு குழைத்த குழம்புபோல் மிகத் திணிந்து காணப்படுவதாயிற்று. அதனைக் காண்டலும் எம் உள்ளம் பெரிதும் புழுக்க முற்று ஆ! இக்காலஅரண்மனையினுள்ளே பண்டைக் காலத்து எம் முது மக்கள் தொகுத்து வைத்த களஞ்சியங்கள் எத்தகையனவோ, அவற்றை எங் கண்ணாரக் காணவும் பெறுகின்றிலமே! அவற்றின் அருமை பெருமைகளை எங்ஙனம் உணர்வேம்!”

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/33&oldid=1591696" இலிருந்து மீள்விக்கப்பட்டது