உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

  • மறைமலையம் - 29

வரையறுத்திருக்கின்றனர். அவற்றுள் மேற்புறம்பிலுள்ள நான்காவ தடுக்கிலும் ஐந்தாவ தடுக்கிலும் புதைந்து கிடக்கும் கல்லாலமைத்த கருவிகள் செம்பாலமைத்த கருவிகள் இரும்பா லமைத்த கருவிகள் முதலியவற்றின் ஆராய்ச்சியால் அவ்வப்படையில் வாழ்ந்த மக்கள் நாகரிக நிலையினை உற்றுணர்ந்து நன்கு விளக்குகின்றனர். இவ்வாறே இதுகாறுஞ் சென்ற காலத்தினையும் பல வடுக்குகளாகப் பகுத்து, ஒரு காலத்து வழங்கிய சொற்கள் அக்கால முடிவில் தாமும் வழங்குதலின்றி அதன்கட்புதைந்து கிடப்ப மற்றை யொருகாலத்து அப்பொருளைக் குறிக்க மற்றை யோர்சொல் தோன்றி அதுவும் அக்கால விறுதியிலே இறந்துபட்டுக் கிடப்ப வருஞ் சொன்முறையை நன்காராய்ந்து அவ்வக்கால வியற்கை யினையும் அக் காலத்து மக்களியற்கையினையும் தெரித்துக் கூறுதல் வரலாற்று ஆராய்ச்சிக்கு இன்றியமையாத கருவியாம். ஒரு மொழியிலுள்ள ஒவ்வோர் சொல்லும் அம்மொழியின் வரலாற்றை நன்கறிவிக்குங் கருவியாமென்பது கடைப்பிடிக்க

பயர்

இனி மகாபாரதப் போர் நடந்ததுதொட்டு இது காறுஞ் சென்ற காலத்தினை வரலாற்று ஆராய்ச்சிக்குள் வைத்து மூன்று கூறாக அறுத்து முதல் இடை கடையென நிறுத்தி அவற்றினியல்புகள் பெரும்பாலும் நன்கு விளங்கவகுத்துக் கூறுதல்' வரலாற்றுக்கால ஆராய்ச்சி எனப் பெறாநிற்கும். இனி இங்ஙனங் காலவரையறைப்படுதலின்றிப் பாரதப் போருக்கு முற்பட்ட காலம் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பண்டைக்காலம் எனப் பெயர் பெறும். கிறித்து பிறப்பதற்கு 1400- ஆண்டுகளுக்கு முன் நடந்த பாரதப் போரில் பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பதினெட்டுநாள் வரையில் உ உதியஞ்சேரலாதன் என்னும் அரசன் சோறு கொடுத்தான் என்பதும், அதுபற்றியே அவனுக்குப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னும் பெயர் வழங்குவதாயிற்றென்பதும் அவ்வரசனோடு ஒரு காலத்தினரான முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் பாடிய “மண்டிணிந்த நிலனும்" என்னும் புறநானூற்றுச் செய்யுளால் இனிது விளங்குதலின் அவ்வரசன் காலம் இற்றைக்கு மூவாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்று நிறுவப்படும். இம்மூவாயிரத்து நானூறு ஆண்டுகளுந் தொடர்ப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/35&oldid=1591698" இலிருந்து மீள்விக்கப்பட்டது