உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் - 29

மாகலின் அவற்றை ஒத்து நோக்குதலால் மொழி யொற்றுமை நன்கு தெளியப்படும். வடமொழியில் அகம், வயம் என்பன முறையே தன்மை யொருமைப் பன்மையாகும்; த்வம், யூயம் என்பன முன்னிலை யொருமப் பன்மையாகும்; அஸௌ, அமூ:, அத:, அமூநி என்பன படர்க்கை உயர்திணை யஃறிணை ஒருமைப் பன்மையாம். தமிழிலும் வடமொழியிலுமுள்ள இவ்விடப் பெயர்கள் தம்முள் ஒற்றுமை சிறிதும் எய்தாமையால் அவை வேறுவேறாதல் தெற்றெனத் துணியப்படும். இனி மக்கள் தம்மோடு இன உரிமை யுடையாரைக் குறிக்குஞ் சொற்களும் அவ்வாறே முதற் பிறந்தனவாம். தமிழர் தமக்கு உறவினராவாரை அம்மை, அப்பன், பிள்ளை, கணவன், மனைவி, அண்ணன், தம்பி, அக்கை, தங்கை என வழங்குவர்; ஆரியர் அவரை யெல்லாம் முறையே மாதா, பிதா, சுத அல்லது பால, பதி:, பார்யா, அக்ரஜா, ப்ராதா, ஸ்வஸா எனப் பெயரிட்டு வழங்குவர். இம் முறைப்பெயர்களுந் தம்மோடு இனப்படுதலில்லாமையால் இவையும் வேறு வேறென்பது துணிக. இன்னும் இவ்வாறே உணவுப்பெயர், எண்ணுப்பெயர், காலப் பெயர், இடப்பெயர், பூதப்பெயர், விலங்கின் பெயர், உறுப்புப்பெயர், வினைப்பெயர் முதலியனவும் இவ்விரு மொழிகளினும் வேறுபடுதல்காண்க. அவையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும். 'தமிழ் வடமொழியினின்று பிறந்ததாமா?' என்னும் பொருளில் விரித்து விளக்கினாம், ஆண்டுக் கண்டுகொள்க. இவ்வாற்றால் இவ்விருமொழியுந் தம்முள் ஒன்றோடொன்றியைபில்லாத் தனித்தனி மொழிகளாதல் நன்கு பெறப்படும். இனித் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவு, குறும்ப, இருள, எர்க்கலா, ஏனாதி முதலான மொழிகட்கெல்லாம் இப் பத்துவகைச் சொற்களும் பொதுப்பட நிற்றல் கண்கூடாயறியக் கிடத்தலின் இவ் வொன்பது மொழிகளும் ஒன்றோடொன் றினப்பட்ட ஒரு தொகுதியா மென்ப துணரப்படும். இனி, ஆரியருந் தமிழரும் பிற்றைஞான்று மிக நெருங்கி மருவி வாழ்ந்தனராகலின் ஆரிய மொழிக்குரிய சொற்கள் தமிழினும் தமிழுக்குரிய சொற்கள் ஆரியத்தினுங் கலப்புற்றன. அவர் அங்னம் நெருங்கியிராது வேறாயிருந்த காலத்தே எழுதப்பட் நூல்களில் விரவிய சால் வழக்குக் காணப்படுதல் சிறிதுமில்லை யென்க. சங்கச் செந்தமிழ் நூல்களில் ஒரோவோர்

6 ஞானசாகரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/37&oldid=1591700" இலிருந்து மீள்விக்கப்பட்டது