உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் - 29

முதற்கொண்டு வருமாகவும், தமிழ் மட்டும் அங்ஙனம் அவ்வெழுத்துக்களை முதற்கண் நிறுத்துக் கொள்ளாமையும், அப் பிறமொழிச் சொற்களையுந் தானெடுத்து வாங்கும்போது டமருகம், இரகு, இராமன், இலம்பகம் என உயிர் முதல் நிறுத்து வழங்குதலும் என்னை என்று ஆராய்கின்றுழி அதனியல்பு நன்குணரக் கிடக்கும். L படைப்புக்காலத் தொடக்கத்திலே தோன்றிய மக்களியல்பும், நம் பழக்கத்திற் காணும் சிறுமகார் இயற்கையும் தம்முட் பெரும்பான்மையுஞ் சமமுடையனவாம். இஃதறிவுடையா ரெல்லார்க்கும் ஒப்ப முடிந்த வோர் உண்மையேயாகும். பிள்ளைப்பருவத்திலே, சொல் உச்சரித்தற்கு இன்றியமையாக் கருவிகளான இதழ், நா, பல், அண்ணங்கள் வேண்டியவாறு இயங்காமையின் அப் பருவத்தே அம்மகார் வழங்குஞ் சொற்கள் மிகச் சிதைவுபடும். சிறுமகார் ‘ராமா' என்பவனை ‘ஆமா’ வென்றழைப்பர். இவ் வுண்மை நாடோறும் பழக்கத்தா லறியற்பாலதேயாம். முன் மொழிக்கு முதலாகா வெனப்பட்ட எட்டு மெய்யெழுத்துக் களும் நா மேலண்ணத்தைச் சென்று தொடும் முயற்சியாற் பிறப்பனவாம். நாவை மேலே சேர்த்தி உச்சரிக்கும் அம்முயற்சி பிள்ளைப்பருவத்தே தோன்றாமையின், அப் பருவத்தே பிறக்குஞ் சொற்களெல்லாம் அவ்வெழுத்துக்களை உடையன வாகா; படைப்புத் தொடக்கத்திற் றோன்றிய மக்களது நிலைமையும் பிள்ளைப்பருவத்தோடு இயைந்ததாகலின், அஞ்ஞான்று அவர் றப்பித்த சொற்களிலே அவ் வெழுத்துக்கள் காணப்படாவாயின. இதனால், தமிழ்ச்சொற்கள் மக்களுடைய முதற்பருவத்திலே தோன்றி நிலவுதலுற்றன வென்பது எளிதிற் பெறப்பட்டது. வடமொழி முதலான மற்றைமொழிச் சொற்கள் முதலிலெல்லாம் அந்நாவெழுத்துக்கள் நிற்றல் அறியப்படுதலின், அவை மக்களுடைய பிற்பருவத்திலே தோன்றியவா மென்பது துணிபொருள். மேலும், இப்போது நூல்வழக்காயுள்ள வடமொழி மக்களால் எஞ்ஞான்றும் பேசப்பட்டதில்லை யென்றும், இதற்குத் தாய்மொழியான ஆரியமே அங்ஙனம் பேசப்பட்டதொன்றா மென்றும் அம்மொழி யாராய்ச்சிவல்ல பண்டிதர்கள் பலரும் உரையா நின்றார். இவ்வாற்றால், மக்களுடைய முற் பருவத்திலே பிறந்த தமிழ்மொழி அவருடைய பிற் பருவத்திலே தோன்றிய வட மொழிக்கும் முற்பட்ட தொன்றாதல் முடிந்த வுண்மையாம். இதன்விரிவும் தமிழ் மிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/41&oldid=1591704" இலிருந்து மீள்விக்கப்பட்டது