உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

-

மறைமலையம் - 29

அம்முறை காட்டினரோ, அல்லது ஆரியர் செய்த முறையைக் கண்டு தமிழர்தாம் அது காட்டினரோ என்பதுதான் ஈண்டு உறுதிசெய்யற்பாலதாம். ஆரியர் இவ்விந்தியா தேசத்திற் புகுமுன்னே அம்முறை கண்டறிந்தனராயின் அஃது அவர்க்கே உரியதாகும்; அவர் இந்தியாவிற் புகுந்த பின் அங்கிருந்த தமிழர் அதனை எடுத்தாண்டு கொண்டாராவர். மற்று ஆரியர் இந்தியாவிற் புகுமுன் அம்முறை காணாதிருந்து புகுந்தபின் அது கண்டனரென்று உரை நிறுவப்படுமாயின், தமிழர்க்கே அம்முறை உரியதாகு உரியதாகு மென்பதும் மென்பதும் அதனையே ஆரியர்

எடுத்தாண்டு கொண்டன ரென்பதும் பெறப்படும்.

னி ஆரியர் இந்தியாவிற் புகுமுன்னே அம்முறை அறிந்தாரில்லை; அஃதறிந்தது உண்மையாயின் அவ்வாரியப் பிரிவினராய் ஐரோப்பாக் கண்டத்தின் தென்றிசை, மேற்றிசை, வடமேற் றிசைகளிற் புகுந்த ஏனை ஆரிய சாதியார் வழங்கிய இலத்தின், கிரீக்கு, டியுடானிக், சிலாவிக் முதலிய ஆரிய மொழிகளினும் அம்முறை காணப்படுதல்வேண்டும். அவற்றி லல்லாம் உயிர் எழுத்து மெய்யெழுத்துக்கள் ஒரு ரு முறையுமின்றிப் பலவாறு மயங்கிக் கிடத்தலின், அம்முறை ஆரிய மொழிக் குரியதன் றென்பது அங்கையுள் நெல்லிபோற் றெளியப்படும். மற்று அவ்வாரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமக்கு முன்னே அங்கு வாழ்ந்து வருந் தமிழ் ஆசிரியர் கண்ட அவ்வெழுத்து முறையை எடுத்தாண்டு கொண்டார் என்க. இவ்வுண்மை பௌத்த இந்தியா என்னும் வரலாற்று நூலில் இரைஸ் டேவிட்ஸ் என்ற அறிஞராலும் நன்கு காட்டப் பட்டது!

1

அதுகிடக்க, ஆரியமொழி இலத்தீன், கிரீக்கு முதலியவற் றோடு இனமுடைத்தாதல் யாங்ஙனமெனிற் காட்டுதும். ஒரு மொழி பிறிதொன்றனோடு இனமுடைத் தென்பது அவற்றின் முதல் தோற்றச் சொற்களின் உருவொப் புமையால் நன்கு துணியப் படுமன்றே! என்னுஞ் சொல் மகனைக் குறிக்கும். அவ்வாரியத் தோடு இனமான ஸெண்ட் என்னும் பாரசீக மொழியிலும் அப்பொருளைக் குறிக்கும் அச்சொல் ஹுநு என்று வழங்குகின்றது; டியூடானிக் மொழியில் சுநு எனவும் அவ்வாறே வழங்குகின்றது. ஆரியத்தில் மகளைக் குறிக்கும் துகிதார் என்னுஞ் சொல், ஸெண்டில் துக்தர் எனவும், கிரீக்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/49&oldid=1591712" இலிருந்து மீள்விக்கப்பட்டது