உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் - 29

புள் முதலியனவும் உயிரில்லாத ஏனைச் சடப்பொருளுமாகிய எல்லாம் அஃறிணையாமென்றும் இனிது விளக்கிச் சூத்திரஞ் செய்தருளினார். ஆண் பண் என்னும் பாற்பகுப்பும் உயர்திணையில் மட்டும் தெற்றென விளங்குதலின் அப் பாகுபாடும் உயர்திணைக்கே கூறி, ஏனை அஃறிணையில் உயிருள்ள எறும்பு முதலியவற்றுள் அப் பகுப்பு அவ்வாறு விளங்காமையின் அதற்கது கூறாராய் விடுத்தனர். எம் அரிய நண்பர்காள்! இப்பாகுபாட்டின் அருமையும், நுட்பமும் நாமுணரா திருக்கின்றோம். பிற மொழிகளில் எங்காயினும் இத்தகைய நுண்பகுப்பு உளதா என்று ஆராய்வோமாயின் அப்போது இதன் பெருமை நன்கு தெளியக்கிடக்கும். ஆங்கில முதலான மேல்நாட்டு மொழியி லெழுதப்பட்ட இலக்ண நூல்களை இடைவிடாது எழுத்தெழுத்தாய் ஆராய்ந்து பார்ப்பினும் அவற்றின்கண் இவ்வரிய பெரிய இலக்கணப் பாகுபாடு ஒரு சிறிதுங் காணப்படாது; அன்றி, இந்திய நாட்டிற் சீர்த்திபெற்ற மொழியாய்ப் பயிலப்படும் வடமொழியிலேனும் இம்முறையுண்டோ வெனின் ஆண்டும் இதனைக் காணேம் ஃதொன்றோ, அவ் வடமொழியிலுள்ள சொற்பொருட் பாகுபாடுகள் நுண்ணறிவிற்குச் சிறிதும் இயையாவாறாய் அமைந்து கிடக்கின்றன. ‘இல்லம்’ ‘வீடு' என்பன உயிரில்லாத அஃறிணைப் பொருள்களென்பதும், அவை தம்மை ஆண், பெண் என வழங்கல் நகையாடுதற் கேதுவா மென்பதுஞ் சிறுமகாரும் அறிவர். இங்ஙனமாகவும், வடமொழியில் கோயில்' என்னுஞ் சொல் ஆண்பாலாகச் சொல்லப்படு கின்றது; ‘சாலை' என்பது பெண்பாலென்று சொல்லப்படு கின்றது. மயிர்க்கற்றை என்னும் பொருளுடைய கபரீ' என்பது பெண்பாலாம், 'கேசவேச' என்பது ஆண்பாலாம்; விருப்பம் என்று பொருள்படும 'இச்சா' என்பது பெண்பாலாம்; 'மநோரத' என்பது அண் பாலாம்; மாலைப்பொழுது என்று பொருள்படும். ‘திநாந்த’ என்னும் ஒருசொல் ஆண்பாலாம்; சந்த்யா' என்னும் மற்றொரு சொல் பெண்பாலாம்; உலகம் என்று பொருள்படும் ‘ஜகதோ' என்பது பெண்பாலாம்; ‘லோக' என்பது ஆண்பாலாம்; சுவர் என்று பொருள்படும் ‘பித்தி’ என்பது பெண்பாலாம்; குட்ய’ என்பது அலிப்பாலாம்; காது என்று பொருள்படும் ‘கர்ண’ என்பது ஆண்பாலாம்; ‘ஸ்ருதி’ என்பது பெண்பாலாம்; 'ச்ரவண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/57&oldid=1591720" இலிருந்து மீள்விக்கப்பட்டது