உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் - 29

என்னும் வேறு பெயருமுடைய பரம்பொருள்; அஃது உருத்திரன் பிரமன் என்றற்றொடக்கத்துத் தேவர்கட்கெல்லாம் அப்பாற்பட்டதொன்றாம்; இவ்வுண்மை,

"தேவர்கோ வறியாததேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை

மூவர்க்கோ னாய்நின்ற முதல்வன்.”

அவை

என்ற மாணிக்கவாசகப் பெருமான் அருமைத் திருவாக்கானும் நன்று தெருட்டப்படும். இருக்கு வேதம் முழுவதும் துருவித் துருவிப் பார்ப்பினும் 'சிவம்' என்னும் பரம்பொருளியல்பு காணப்படமாட்டாது. அங்கெல்லாம் உலக இயற்கைப் பொருள்களாற் றாம்பெறும் பயன் குறித்து தம்மையெல்லாம் தம் அறியாமையாற் றெய்வங்களாகக் கருதி ஆரியமக்கள் வழிபட்டு வந்த கீழ்நிலை அறிவு புலப்படக் கிடக்குமே யல்லது, பரம்பொருட் சொரூப முணர்ந்த மேல்நிலை அறிவு சிறிதாயினும் ஆண்டுப் பெறப்படுதலில்லை. அறிவிற் சிறந்த தமிழ் மக்காள்! இங்ஙனம் வேதத்தின் உண்மைகூறி மாந்தர்க்கு அறிவு கொளுத்த வருவாரைக் கண்டு மனம் புழுங்கி உயர் குலத்தினரெனத் தம்மை இறுமாந் தெண்ணி யிருப்பார் சிலர் ‘அவை திகர்' எனப் புறம்பழிப்பர். அவர் கூறும் அப் புறம் பழிப்புரைக்குச் சிறிதும் அஞ்சன்மின்! எவர் யாது கூறினும் உண்மை கரக்கப்படாதென்க.இத்துணைக் கீழ்நிலை அறிவையே போதித்துப் பயனின்றி விரிந்துகிடக்கும் அவ்வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாதவர் என்று எம்மைப் புறம் பழிப்பதுபற்றி நம்மனோர்க்கு வரும் இழுக்கென்னை? ஒருசிறிது மில்லையாகலின், நாம் தத்துவ வுரிமை கைவிடாமாய் மெய்ப்பொருள் கூறுதலையே கடைப் பிடிப்பாமாக. நமக்கும் மற்றும் அறிவுடையார் எல்லார்க்குஞ் சிறந்த பிரமாண மெய்ந்நூல்களாயுள்ள தொல்காப்பியம், திருக்குறள் முதலியனவே நமக்குச் சாலுமென்று மனந்திருந்து மின்கள்! பிறர் கூறும் பகட்டுரைக்கஞ்சி உண்மையைக் கைவிட்டு விடாதீர்கள்!

இனிச், சிவம் என்னும் அப் பரம்பொருள்நிலை அவ்விருக்குவேதத்திற் கூறப்படாதது கொண்டு அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/63&oldid=1591726" இலிருந்து மீள்விக்கப்பட்டது