உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் லயம் - 29

கடைப்படியாக மக்கள் யாக்கையில் வரலானது இற்றைக்கு ஐந்நூறாயிர ஆண்டுகளுக்கு முன்னரேயன்றி, அதற்கு முன் மக்களுடம்புடைய எத்தகைய உயிருமே இல்லையென்று இத்துறையிற் பேருழைப்பெடுத்துப் பெரிதாராய்ந்த நில நூல் உயிர் நூல்வல்ல மேல்நாட்டாசிரியர்கள் முடிவுகட்டி யிருக்கின்றார்கள். ஆகவே, இம் மண்மிசைத் தோன்றிய உயிர்த்தொகைகளிற், கடைமுறையாகத் தோன்றியவை மக்களுடம்பு வாய்ந்த ஆறறிவுயிர்களேயென்றும், இவை தோன்றிய காலம் ஐந்நூறாயிர ஆண்டுகளுக்குமேற் சென்றதாகாதென்றும் நினைவிற் பதித்தல் வேண்டும்.

2. மக்கள் முதன்முதற் றோன்றிய இ ம்

னி, இந்நிலவுலகின் எந்தப் பகுதியில் முதன் முதல் எல்லா உயிர்களும் வாழத் துவங்கின என்பது ஆராயற்பாற்று. நீரைவிட்டு நிலத்தின்மேற் போந்த பின் உயிர்கள் பசியால் வாடி மடியாமல் நிலைப்படுதற்கு வேண்டியவை உணவுப்பண்டங்கள் அல்லவோ? ஆகவே, உணவுப்பண்டங்கள் முதன்முதல் எந்த இடத்தில் மிகுதியாய்த் தோன்றிக் கிளர்ந்தனவோ, அந்த டமே உயிர்கள் நன்கு உயிர்வாழ்ந்து பல்குதற்கு ஏற்ற பெருவளன் உடையதாதல் வேண்டுமென்பதை எவருமே அறிவர். இந்நிலவுலகின் வடமுனைப் பாங்கரும், இதன் தென்முனைப் பாங்கரும் அன்றும் இன்றும் பனிப்பாறைகளால் மூடப்பட்டிருத்தலின், அங்கே புற்பூண்டுகளும் மரஞ்செடி கொடிகளும் உண்டாவதில்லை. அவை யில்லையாகவே உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையா உணவுப்பண்டங்களும் அப்பகுதிகளிற் கிடைப்பதில்லை. ஆகவே, வ தென்முனைகளை நெருங்கிய நாடுகளில் மக்கள் முதன்முதற் றோன்றி வாழ்ந்திருத்தல் இயலாது.

L

L

முனை

பின்னர், அவ் வடமுனை தென்முனைகளுக்கு மிக விலகி, இந்நிலத்திற்கு நடுவணதான குமரி நாடே, பகல் இராப்பொழுதுகளும் வெப்பதட்பங்களும் ஒத்த நிலையில் இயற்கையே பொருந்தப்பெற்று, மரஞ் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்து, நெல், கோதுமை, பல்வகைப் பயறுகள், தீஞ்சுவைக் காய்கனி கிழங்குகள் முதலான உணவுப் பண்டங்களை வழங்குதலின், ஈதொன்றே மக்களும் பிற உயிர்களும் முதன்முதற்றோன்றி உயிர்வாழ்ந்து, பல்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/79&oldid=1591743" இலிருந்து மீள்விக்கப்பட்டது