202
4. அமைதி
இனி, மேற்கூறிய தீயகுணங்களை விட்டு நற்குணங்களிற் பழகுவதற்கும் உயிர் ஆற்றலை வீணே கழியவிடாமல் அதனைத் தடுத்து நிறுத்தித் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளுவதற்கும் மிக எளிதான ஒரு வழி இருக்கின்றது. இஃது ஆற்றின் நீரோட்டத்தை உற்றுப் பார்த்து அறிய வல்லவர்களுக்கு எளிதிலே புலப்படற்பாலதேயாம். ஆழமின்றிக் குறைந்த அளவுள்ள நீரோடும் ஆற்றினையும், ஆழம் மிக உடையதாய் மிகுந்தநீர் வெள்ளமாய்ப் பெருகி ஓடும் ஆற்றினையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆழமில்லாத சிறிய நீர் ஆரவாரத் தோடும் மிக விரைவாய் ஓடுகின்றது; ஆழமுள்ள மிகுந்த நீர் ஓசையின்றி அமைந்து செல்லும் ஒருவகை இனிய வேகமுள்ளதாய்ச் செல்லுகின்றது.
இனி இவ்வாற்றின் இவ்விருவகை நீரோட்ட இயல்பினையும் அவையில் நின்று பேசும் புலவர் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருவர் ஒரு நிமிடத்தில் ஒன்பதினாயிரஞ் சொற்களை நிறைத்து அதிவேகமாய்ப் பரபரப்போடு பேசுகின்றார்; இவர் பேசுவனவற்றை அவையிலிருந்து கேட்போரில் யாருமே தெரிந்துகொள்ள மாட்டாதவர்களாயிருக்கின்றனர். கேட்பவர்களில் அறிவுடையராயிருப்பவர் ‘ஓ! இவரென்ன பொருளின்றி வெறுஞ் சொற்களை வாரியிறைத்து வீண்பொழுது போக்குகின்றார்!’ என்று அவர் தன்மைக்கு இரக்கமுற்று இருப்பர்; கேட்பவர்களில் அறிவில்லாத பேதைகள் இவர் திறமையை என்னவென்றுதான் சொல்லுகிறது! சும்மா முகில்போற் பொழிகிறார்! இவர்சொல்வதை நாம் அறிந்து கொள்ள ஆற்றலில்லையே!’ என்று வியப்படைகிறார்கள்.
அறிவுள்ளவர் அறிவில்லாதவர் என்னும் இருதிறத்தாரும் இங்ஙனம் பேசிக்கொள்வதிலிருந்தே இவ்விரு திறத்தார்க்கும்