உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
245

கண்ணனால் அது தீருமென்றருளிச் செய்தமையும் எவரும் உணர்வர். இந்நிகழ்ச்சிகளால் நினைவு முனைப்பு உடையோர்க்குள்ள மனவலிமையின் மாட்சி நன்கு விளங்கும். அது நிற்க.

இனி,நினைவை முனைக்க நிறுத்துதற்குச் சில எளிய வழிகள் காட்டுதும் முதலில் நினைவை ஒன்றில் நிலைத்து நிற்கும் படி செய்து சிலநாட் பழகிக் கொள்ளல் வேண்டும். அப்பழக்கம் ஏறிய பிறகுதான் நினைவை முனைக்க நிறுத்துதற்கு முயலல்வேண்டும். காலைப்பொழுதிலேனும் மாலைப் பொழுதிலேனும் ஒரு கடற்கரையிலாயினும், அல்லதோர் ஏரிக்கரையிலாயினும், அல்லதோர் ஆற்றங்கரையிலாயினும் தனியே போயிருந்து அங்கங்குள்ள காட்சியைக் கண்ணாற் கருத்தோடு கண்டு, பிறகு கண்ணை மூடிக்கொண்டு மனத்தால் அக்காட்சியைக் கண்டபடியே நினைவுக்குக் கொண்டுவந்து தெளிவு பெறக் காண்க. கண்ணாற் கண்டதற்கும் பிறகு நினைவாற் பார்ப்பதற்கும் சிறிதும் வேறுபாடு இல்லாதபடி அவ்வளவு பொருத்தமாக அவையிரண்டும் இருத்தல்வேண்டும். இவ்வாறு உயிரில்லாத பருப்பொருட் டோற்றங்களை முதலிற் றெளிவாய் நினைவில் அமைத்துக்கொள்ளப் பழகியபின், இடம் பெயர்ந்து செல்லாத ஓரறிவுயிர்களான புற்பூண்டுகள் மரஞ்செடி கொடிகள் சிலவற்றின் வடிவங்களையும் அமைப்புகளையும் உற்றுநோக்கி, நோக்கியபடியே நினைவிற் பதித்துக் கொள்க.

இங்ஙனம் பழகியபின்,இடம்பெயர்ந்து செல்லும் உயிர்களைக் கருத்தாய்ப் பார்த்து நினைத்ததொன்றை அவை செய்யுமாறு நினைவை முனைக்க நிறுத்தி முயலத் தொடங்கல் வேண்டும்.ஏனென்றால் உயிர்அற்ற பருப்பொருள்களையும், உயிர் உடையவேனும் இருந்த இடத்தைவிட்டு அசையாத ஓரறிவுயிர்களையும் நினைவில் அமைத்துக் கொள்ளலாமே யொழிய, அவை ஒன்று செய்யுமாறு நினைவால் ஏவி முடித்தலாகாது.நினைவை முனைக்க நிறுத்தலென்பது நினைக்கப்பட்ட உயிர் நினைந்தபடி ஒன்றைச் செய்யுமாறு ஏவும் முயற்சியேயாதலால், அஃது அங்குமிங்குமாய் உலவும் உயிர்களிடத்து மட்டுமே தான் நிறைவேறுவதாகுமென்று கடைப்பிடிக்க யாடு மாடு குதிரை பூனை நாய் முதலான சிற்றுயிர்கள் ஒருவர் தாம் நினைந்தபடி ஒன்றைச் செய்யுமாறு;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/278&oldid=1626088" இலிருந்து மீள்விக்கப்பட்டது