297
14. பயன்படுத்தும் முறைகள்
நினைவுத்துயிலின்கண் நினைவுமாறாமல் இருத்தலால் இதனாற்சில எளிய பயன்களைத்தாம் பெறுதல்கூடும். இத்துயிலில் இருப்போர் துயிற்றுவோர் பால் நினைவு ஒன்று பொருந்தி நிற்பர்; அவர் சொல்லுகிறபடியே செய்வாரல்லாமல் அவர்க்கு எதிரிடையானது ஒன்றுஞ்செய்யார். துயிற்றுவோர் அவர் கண்களைமூடி ‘இவைகளை நும்மால் திறக்க முடியாது’ என்று சொன்னால் அவர் அங்ஙனமே அவற்றைத் திறக்க மாட்டாமல் இருப்பார். அவரது வாயைமூடி ‘நுமது பெயரைக் கேட்டால், அதனைச் சொல்லமாட்டாமல் வறிதே இருப்பீர்’ என்று சொன்னால் அவர் அப்படியே இருப்பர். வெங்காயத்தைக் கையிற்கொடுத்து ‘இது நல்ல மணம் உள்ளதொரு முல்லைப்பூ, இதனை முகந்துபாரும்’ என்றால் அவ்வாறே அதனை முகந்து மகிழ்வர். இனிய மணங் கமழுஞ் செங்கழுநீர்ப்பூ வொன்றைக் கயிற்றந்து, ‘இது மணம் இல்லாத எருக்கம்பூ’ என்று மொழிந்தால், உடனே அவர் அதனை முகந்துபார்த்து அது மணமில்லாததென்று அருவருப்புறுவர். அவரது கையைப் பிடித்து அதில் ஓரிடத்தைக் குறித்துக் காட்டி ‘இவ்விடத்தில் இரத்த ஓட்டம் இராது, இங்கே உணர்ச்சி இராது, நோவும் இராது’ என்று உறுத்திச்சொல்லியபின் ஒரு குண்டூசியை எடுத்து அவ்விடத்தே மேற்சதையிற் செருகினால் அவர் அதனைச் சிறிதும் உணரார்; பிறகு அதனைப் பிடுங்கிவிட்டு அவ்விடத்தை விரலால் தேய்த்து விட்டால் அங்கே ஓர் அடையாளமுங் காணப்படாது. இங்ஙனமே, இத்துயிலில் இன்னும் பல வேடிக்கைகளை யெல்லாம் செய்துகாட்டலாம். இத்துயிலில் இருப்போர்க்குக் கண்கள் மூடியும் இருக்கலாம். திறந்தும் இருக்கலாம். திறந்திருக்குமாயின் துயிற்றுவோர் கட்பார்வையும் இவரது கட்பார்வையும் ஒன்றையொன்று உற்றுநோக்கிய ய படியாய் இருத்தல் வேண்டும். மூடியிருக்குமாயின் துயிற்றுவோர்