உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
45



அதற்கு ஸ்டெட் துரை : "தாங்கள் கிளாட்ஸ்டன் துரை அவர்களா?”

கிளாட்ஸ்டன் : “மண்ணுலகத்தில் யான் கிளாட்ஸ்டன் என்று சொல்லப்பட்டேன். இப்போது அரசாங்கத்தில் உள்ள என் பழைய கட்சிக்காரர் நிலையினையும், அரசாங்க முறையினையும் யாரோ ஒருவர் என்னுடன் பேச விரும்புவதாக அவ்வம்மை என்னிடம் சொன்னாள். இஃது அப்படித்தானா?”

ஸ்டெட் : “ஆம், ஆம்; முதலாவது அரசிறைக் கணக்கைப் பற்றியும் பிரபுக்கள் சபைக்கு நேர்ந்திருக்கும் இடரான நிலையைப்பற்றியும் தங்களபிப்பிராயந் தெரிய வேண்டுகின்றேன். சென்ற இரவு இந்த மாதரார் கையைப் பற்றித்தான் தாங்கள் எழுதினீர்களோ என்பதைத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

கிளாட்ஸ்டன் : “ஆம்; அவ்வம்மையின் வீட்டிற் சிலகாலம் யான் இருக்க நேர்ந்தபோது இவளிடம் எனக்குப் பட்சமுண்டாயிருந்ததனாலும், அவள் என் நினைவுகளை எல்லாம் தெரிந்து எழுதிக் காட்டினாள் என்று யான் அறிந்ததனாலும் அப்படி அவள் கையைக் கொண்டு எழுதினேன். மேலும் இப்போது உம்முடன் உரையாடும் இந்த முறை எனக்குத் தொந்தரவாயும் கலக்கமாயும் இருத்தலால், இதைவிட அம் மாதரார் கையைப்பற்றி எழுதும் வழியே எனக்கு மிகப்பிரியமானது.

ஸ்டெட் : “எனக்குத் தோன்றுவது என்ன வென்றால், அவ்வம்மையாருக்கு அரசாங்க முறையைப் பற்றி ஒன்றுந் தெரியாதாகையால், எதனையும் உறுதிப்படுத்திச் சொல்வது அவர்கட்குக் கடினமாயிருந்தது. தினசரி வர்த்தமானப் பத்திரிகாசிரியர் அரசிறைக் கணக்கைப்பற்றியும், பிரபுக்கள் சபைக்கும் குடிமக்கள் சபைக்கும் நேர்ந்திருக்கின்ற முட்டுதலைப் பற்றியும் தாங்கள் ஏதேனுந் தங்கள் கருத்தை அறிவிக்கக்கூடுமா என்று விரும்பிக் கேட்கிறார். பணிவோடும் நன்றியறிவோடும் தங்களை நினைவுகூர்ந்து வருகின்றவர்கள் கேட்கும் பிரிய வினாக்களுக்குத் தங்கள் கருத்தை விடையாகப் பகரக் கூடுமாயின் நன்றாகும்.”

கிளாட்ஸ்டன் : “அத்தகைய நினைவை நீர் பட்சமாய் எடுத்துக் கூறியதற்கு யான் வந்தனஞ் செய்கின்றேன்; ஆனாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/78&oldid=1628590" இலிருந்து மீள்விக்கப்பட்டது