உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54

❖ மறைமலையம் - 3 ❖

செல்வார்களானால் அதிசீக்கிரத்திற் பெருக்கம் அடைவார்கள். தீர்வைச் சீர்திருத்தமாகிய இரகசிய மருந்தால் அவர்கள் மயக்கப்படாதிருக்கக்கடவராக! தம்மிடத்துள்ள தன்னலம் பாராட்டுதலை அறத்துடைத்துத் தமது கருத்தைத் தமக்குரிய உண்மைச் சம்பவத்திலும், தம் சாதியாரின் சுகத்திற்கு அவசியமாய்ப் பிராணாதாரமான விஷயங்களிலும் ஊன்ற வைப்பாராக! இப்போது நாம் உம்மை விட்டுப் போக வேண்டும்.”

ஸ்டெட்: “மறுமையுலகத்திற் சென்றவர்களுக்கும், நாளும் ழைப்பு மிகுந்த இம் மண்ணுலக்தி லுள்ளவர்களுக்கும் இங்ஙனம் உரையாடல் நடந்தேறுவதால் இவ்வுலகத்தார்க்கு தேனும் பயன் விளையுமென்று தாங்கள் நினைக்கின்றீர்களா?”

கிளாட்ஸ்டன் : “இச் செய்தியில் என் சொந்தக் கருத்து து : மிகவும் பத்திரமாகப் பாதுகாத்துச் செய்யப்பட்டாலன்றி, எம்முடைய நிலையிலுள்ளார்க்கும் உங்கள் உலகத்திலுள்ளார்க்கும் இங்ஙனம் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்துவது மிகவும் இடர்தருவதாகும். ஆகையால் அதனை வலுக்கட்டாயம் பண்ணுவது ஆகாது.

ஸ்டெட் : “ஐயா கிளாட்ஸ்டன் துரையவர்களே! நாங்கள் இங்கே வைத்திருப்பதுபோல மிகவும் பத்திரமாகச் செய்தால்?”

கிளாட்ஸ்டன் : “என்னாற் பார்த்தறியக் கூடிய வரையில் இந்த மந்திரக் கூட்டத்தைச் சூழ ஏற்படுத்தப்பட்டிருக்கும் காவல்கள் மிகவும் உபயோகமுள்ளனவாயும், இம் மண்ணுலகை அடுத்துச் சுற்றிக் கொண்டிருக்கும் தீய பேய் வடிவங்கள் அணுகவொட்டாமல் தடுப்பனவாயும் இருக்கின்றன. ஆகவே, அதிசாக்கிரதையோடும் ஆழ்ந்த சிந்தனையோடும் நடத்தப்படுமானால், இம் மந்திரக் கூட்டத்தார் செய்யும் முயற்சி பயன்படுவதாயிருக்கும்.”

ஸ்டெட் : “கடைசியாகத் தங்களுடன் யான் நடத்திய உரையாடலில், இறந்துபோகும் இம் மாந்தருக்கு இதுதான் மிகவும் முதன்மையாகப் பேசவேண்டிய செய்தி என்று கூறினீர்களா?”

கிளாட்ஸ்டன் : “ஆம், ஆம். அதனை யான் நன்றாக நினைவுகூர்கின்றேன். அப்போது யான் உமக்குச் சொல்லியதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/87&oldid=1628604" இலிருந்து மீள்விக்கப்பட்டது