உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூக இயல் - 2

vii

ஆயிரம் மூளை களை சிந்திக்கச் செய்யும்

மறைமலையடிகளின் நூல்கள் ஆயிரம் மூளை களை சிந்திக்கச் செய்யும், பத்தாயிரம் நாக்குகளை பேசச் செய்யும், அத்தோடுஒரு நூற்றாண்டு காலத்திற்கு காகுதல் ஆற்றல் மிக்க எழுத்தாளரை எழுதச் செய்யும். மறைமலையடிகளின் நூல்களை நுகரவேண்டிய முறையில் நுகர்வோர் இவ்வுண்மையை உணர்ந்தே யாவர்.

66

- எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை

அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஒருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யான் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவதுண்டு. வேதாசலனார் தமிழ் செந்தமிழ் - சங்கத்தமிழ் என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ்நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதி யிட்டுக் கூறுவேன்.”

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் 163

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/8&oldid=1591919" இலிருந்து மீள்விக்கப்பட்டது