உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தனித்தமிழே எம்மூச்சாம்; தனித்தமிழே பேச்சாம்;

தனித்தமிழில் எழுதுவதே தகவுடைய கொள்கை; இனித்தமொழி எம்மொழியின் இயல்நிைைய வீழ்த்த இடைப்புகுந்து கெடுக்கின்றார் எவரவரெம் பகைவர்; தனித்தமிழின் கொள்கையினைத் தயக்கமின்றிக் கொள்வோர் தமிழ்த்தாயின் புதல்வரெனத் தடையின்றிக் கொள்வேம்; இனிக்கலந்து கெடுப்பாரின் இழிசெயலைச் சாய்ப்போம்;” எனவெழுந்த மலைபோல இலங்குமலை உண்டோ? புனலோடு புனலாகப் போயொழிதல் இன்றிப் புனல்சாயப் புல்சாய்தல் போலேயும் இன்றிக் கனலோடு கலந்தாலும் கவினொளியே செய்யும் கலப்பறியாப் பசும்பொன்னாய்க் காட்சிதரு செம்மல், இனலோடு தடைகளெல்லாம் எதிர்த்தெழுந்த போதும் இறையேனும் அசையாத இறைமைமிகும் அண்ணல், எனலோடும் அமையாமல் இவர்கொள்கை பேணி இன்றமிழை வளர்ப்பதிலே இசைந்திடுவம் வாரீர்!

புலவர் இரா. இளங்குமரன்

உழை

உயர் உதவு

2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

600 017

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/346&oldid=1593081" இலிருந்து மீள்விக்கப்பட்டது