உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

பிள்ளைத் தமிழ் முன்னுரை

மறைமலை அடிகள் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவர் ஆவார். அவர் தஞ்சை மாவட்டம் நாகைப்பட்டினத்திற்கு அருகில் உள்ள காடம்பாடி என்னும் ஊரில் 15-7-1876 அன்று பிறந்தார். “தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்ற

பாராட்டுதலுக்கு உரியவர் ஆனார். பக்தியோடு தமிழ் பரப்பினார். அவரது பேச்சும் எழுத்தும் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பின.

அன்னாரது நூற்றாண்டு விழா நினைவாக இப்பிள்ளைத் தமிழ் நூலை எழுதி உள்ளேன். இயன்றவரை எளிமையாகவும் இனிய சந்தத்திலும் பாடி உள்ளேன். மதுரை மீனாட்சி கோயிலில் 1973 ஆம் ஆண்டில் பரிசு பெற்ற “பாண்டிமாதேவி" என்ற எனது பொற்கிழிக் காவியத்திற்கு அடுத்து இச் சிற்றிலக்கியத்தினைத் தமிழ்த் தாயின் திருவடிகளில் படைக்கிறேன்.

123,முத்துப்பட்டணம் III தெரு,

காரைக்குடி.

15-11-1976

அன்புசால்,

அரு. சோமசுந்தரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/28&oldid=1594917" இலிருந்து மீள்விக்கப்பட்டது