| ❖ மறைமலையம் 4 ❖ |
உருவெய்தும் என்றும், இவ்வாறே, மண் புனல் அனல் கால் என்னும் ஏனை நாற்பொருளுங்கூட இறப்ப நுண்ணியதோர் டைவெளி நிலையைப் பெறும் என்றும், இங்ஙனம் இடைவெளி நிலையில் நிற்கும் ஐம்பெரும் பொருள்களும் ஐந்து தன் மாத்திரைகள் என வழங்கப் படுமென்றுஞ் சாங்கியமுஞ் சைவசித்தாந்தமுங் கூறா நிற்கும். இவ்வைம்பெரு வெளியின் இயல்புகளும், இவற்றில் நிகழும் வியத்தகு நிகழ்ச்சிகளும் தெளிவுக்காட்சி (Clairvoyant vision) யுடையார்க்கன்றி, ஏனைப் புறக்கண் மட்டுமே யுடையார்க்கு ஒரு சிறிதும் புலனாகா வாயினும், இவ்வைவகை வெளிகளும் மெய்யாகவே யுளவாதல் மேற்காட்டியபடி நம் புறக்கண் எதிரே அவற்றின்கட் காணப்படும் மாறுதல் நிகழ்ச்சி கொண்டு நன்கு துணியப்படும். இவ்வைந்து வெளிகளுங்கூட மேலும் மேலும் நுண்ணியவாய்த் திரிந்து திரிந்து சென்று கடைப்படியாகத் தன்னில் வேறுபாடு சிறிதும் விளங்காத மெய்யான மாயைவெளியாய் நிற்கும்.
தடித்த பருப்பொருள்கள் இங்ஙனஞ் செயற்கையாக அழிவு காலத்தில் திரிந்து நிற்குமாறு போலவே, அவ்வப் பொருள் களோடொத்த நுண்ணிய வெளிகளும், எல்லாம் நிலைபெற்று நிகழ்கின்ற இந் நிலைக் காலத்திலும் இயற்கையாக உளவாம்.
இங்ஙனம் இயற்கையாய் ய் என்றும் உளவாய் நிற்கும்
வெளிகளிலிருந்தே ஏராளமான பொருள்கள் காலங்கடோறும் புதிய புதியவாய்த் திரண்டுருண்டு நாம் நுகர்வதற்கு எளிய பருவடிவிற் றோன்றுகின்றன. மண்வெளியிலிருந்து எவ்வளவோ புதுப்புதுப் பொருள்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன; நீர் வெளியிலிருந்து எவ்வளவோ புதுப்புது நீர்ப்பண்டங்கள் தோன்றுகின்றன; தீவெளியிலிருந்து சூடான பண்டங்களுஞ் சூட்டினைத்தரும் பொருள்களுந் தோன்றுகின்றன; கால் வெளியிலிருந்துங் கணக்கற்றவை பிறக்கின்றன! வெளியிலிருந்தும் அங்ஙனமே பலப்பல போதருகின்றன.நமதுயிர் வாழ்க்கைக்குப் பலவகையிற் பயன்படும் பொருள்களையும் உணவுப் பண்டங்களையும் நன்காராய்ந்து பார்த்தாலே, அவையெல்லாம் அவ் வெளிகளிலிருந்து தோன்றுமுண்மை தெற்றென விளங்கும். நூறுக்கு நூறடியுள்ள ஒரு சிறு நாற்பால் எல்லையிடத்தில் முப்பத்தாறு தென்னங்கன்றுகள் வைத்துப்
க
வான்