உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

19

வழியிலேயே நிறுத்திப் பொருள்களின் அமைப்பையும் டத்தையும் உற்றறிதலாலே உண்டாகும் நன்மையும், அங்ஙனம் நிறுத்தாமற் பலவற்றையும் பற்றிப்பற்றி மனம் அலைந்து திரியவிட்டு வருந்துதலால் வருந் தீமையும் நன்கு அறியலாம். இன்னும், ஒரு மாணாக்கன் கணக்குநூல் பயிலும் போது, அதிற் சால்லப்பட்ட கணக்குவகைகளிற் கருத்தை அழுந்தவையாமல், தான் விளையாடப்போம் இடத்தையும் தன் நேசரையும் தின்பண்டங்களையும் எண்ணிக்கொண்டே

அதனைப்

பார்ப்பனானால் அக் கணக்கின் வகைகள் அவற்குச் சிறிதும் புலப்படாமற் போகும். போகவே மனச்சோர்வடைந்து ‘எத்தனை முறை பயின்றாலும் இக் கணக்குகள் என் மண்டையில் ஏறவில்லையே' என்று புத்தகத்தை வீசி எறிந்துவிட்டுப் போய்விடுகின்றான். அவன் அக் கணக்கு நூலைக் கையில் எடுத்தவுடனே, தன் விளையாட்டுத் தொழில்கள் எல்லா வற்றையும் முற்றும் மறந்துவிட்டு, எடுத்த பாடத்திலே அறிவை நாட்டுவானானால், எவ்வளவு விரைவில் அவன் அதன் பொருள்களைச் செவ்வையாகத் தெரிந்து தேர்ச்சி பெறுவான்? கலாசாலை மாணாக்கரிற் பெரும்பாலார் இங்ஙனமே எடுத்த பாடத்திற் கருத்தைப் பதியவையாமற் பொழுதை வீணாக்கு கின்றார்கள். இன்னும், ஒரு பெண் சமையல் வேலையை முதன் முதற் கற்கப் புகுகின்றாள். அரிசி பருப்பு முதலியவற்றை வேவுவித்தற்கு அளவான நீர் தெரிந்து கலப்பியாமையால் முதலில் அவற்றைக் கெடுத்துவிட்டாலும், நேற்று இவ்வளவு நீர் மிகுந்ததனாலோ குறைந்ததனாலே அவை கெட்டுப்போயின. இன்றைக்கு இவ்வளவு நீர் சேர்த்து வேவுவித்தாற் பதமாக வரும் என்று ஆராய்ந்து செய்து மறுநாட் செவ்வையாக அவற்றைச் சமைத்திடுகின்றாள். அவ்வாறே குழம்பு, மிளகுநீர், கூட்டுக்கறி, அவையல், வறல், துவையல், பாயாசம் முதலிய சமையல் வகைகளையும் வேவுவிக்கும் அளவும், அவற்றிற் சேர்க்க வேண்டுங் காரம் உவர்ப்பு, புளிப்பு தித்திப்பு முதலியவற்றின் அளவும், இனிது அறிந்து பாகஞ்செய்தலால் அவை நாவிற்கு மிக்க சுவையைத் தந்து உடம்பையுஞ் செழுமையாக வளர்த்து வருகின்றன. இங்ஙனமெல்லாந் தன் கருத்தைப் பாகஞ் செய்யும் வகைகளிற் பதியவையாமல் வேடிக்கையிலும் விளையாட்டிலுந் தன் காலத்தைக் கழிப்பளாயின், அவள் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/52&oldid=1576004" இலிருந்து மீள்விக்கப்பட்டது