உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

37

நீங்களும் உங்களுக்கென்றே ஒன்றும் வேண்டாமல் எல்லாவுயிர்கட்கும் உதவி செய்தல் கடமையன்றோ? நீங்கள் பிறரிடம் ஓர் உதவியை எதிர்பார்ப்பது போல, மற்றவர்களும் உங்களிடம் ஓர் உதவியை எதிர் பார்ப்பரன்றோ? அங்ஙனமாக, நீங்கள் பிறவுயிர்களின் நன்மையை ஓர்ந்து பாராமல் உங்கள் நன்மையிலே மட்டுங் கருத்தூன்றிப் பற்று வைத்தொழுகுதல் என்னை? அப் பற்றினால் நீவிர் பெற்ற பயன்கள் யாவை? துன்பமுங் கவலையும் இகழ்வும் பழியும் இறப்பும் பிறப்பும் அல்லவா? ஆகையால், முதலிற் பொருட்பற்றை ஒழிமின்கள்! பொருள் ஈட்டுதற்கு முயலும் போதெல்லாம் அப் பொருளிற் பற்று வையாது, அப் பொருள் பிறவுயிர்களுக்கும் பயன்படல் வேண்டும் என்னும் பகுத்தறிவு கொண்டு எல்லாவுயிர்களிடத்தும் நெஞ்சம் இளகி உதவி செய்து ஒழுகுமின்கள்! இங்ஙனஞ் செய்து வரவர நுங்கள் அறிவு தூயதாகி அகமுகமாய்த் திரும்பினால் இறைவன் அருள் வெளியையே நாடி நிற்கும் .

இனி, மனைவி அருமையிற் சிறந்த

மக்கள்மேல் மெய்யன்புகொண்டு, இவ்வுயிர்களை ஆண்டவன்

6

என்

னோடு பொருத்தியது, இவர்கட்கு நான் உதவிசெய்தும், இவர்கள் உதவியை நான் ஏற்றும், மற்ற எல்லாவுயிர்கட்கும் இடையறாது நன்மை செய்தற்கே என்று பகுத்தறிந்து, அவர்களுடன் கூடிஎல்லா உயிர்கட்கும் வேண்டும் உதவிகளெல்லாஞ் செய்து ஒழுக நினைமின்கள்! ஆனால், அம் மனைவி மக்கள்மேற் பற்று மிகுதியும் வைத்து, இவர்களே எனக்குப் பொருள்கள், இவர்கட்கே வேண்டியன வெல்லாம் யான் செய்யக் கடவேன், எவர் எக்கேடு கெட்டாலும் என் மனைவி மக்கள் மேற் பற்று மிகுதியும் வைத்து, இவர்களே எனக்குப் பொருள்கள், இவர்கட்கே வேண்டியனவெல்லாம் யான் செய்யக் கடவேன், எவர் எக்கேடு கெட்டாலும் என் மனைவி மக்கள் வாழ்ந்தாற் போதும், யார் குடியைக் கெடுத்தாயினும் என் மனைவி மக்களைச் செல்வத்திற்புரளவைப்பேன் என்னுங்கொடிய பற்றுதல் நினைவை அறவே ஒழிமின்கள்! இங்ஙனம் அவர்கள்மேற் பற்று வைத்தலாற் பிறவுயிர்களைக் கெடுத்து நீவிருங் கெடுதலன்றி, நும் மனைவி மக்களையும் பாழாக்கி ஒழித்து விடுவீர்கள்! ங்ஙனம் பற்றுவைக்கும் உறைப்பால் ஒரோவொருகால் நீர் அகமுகமாக நும் நினைவைத் திருப்பினால், அந் நினைவு நும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/70&oldid=1576022" இலிருந்து மீள்விக்கப்பட்டது