உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் – 4

மட்டுமோ? நினைவினாற்றலுங் குறைந்து, அதனால் உயிருக்கு அறிவு விளங்குதலும் இல்லையாகி இவ்வுடம்பு வெறும் பயனற்றதாகி ஒழிகின்றது. பாருங்கள்! நமது அறிவு விளங்குதற் பொருட்டுத் தரப்பட்ட ஐம்பொறிகளே, தெரிந்து பயன்படுத்தப் படாவிட்டால் அவ்வறிவினைத் தடை செய்து உடம்பையும் பாழாக்கும். ஆகையால், அவற்றைத் தெரிந்து பயன்படுத்தித் தமது அறிவை விரிவு செய்ய வேண்டுவார் எவரும் ஐம்பொறிகளிற் சிறந்த கட்பொறியை உற்றுப் பார்க்கும் வழக்கத்திலே வைத்து இடைவிடாது பழக்கி வரல் வேண்டும்.

இனிப் பார்வைக்கு இனிமை தராத பொருள்களிலே மனம் அழுந்தி நிற்கமாட்டாதாகலின், முதலில் அதனை னிமை வாய்ந்த பொருள்களிலே நிறுத்தி வைக்க முயலல் வேண்டும். எடுத்துக்காட்டாகப் பால் போல் நீர் நிரம்பின ஒரு குளத்திலே செக்கச்செவேல் என அலர்ந்திருக்குஞ் செந்தாமரை மலர்களைக் காணும்படி நேர்ந்தால், அம் மலர்களின் ஒவ்வொரு உறுப்பையும் நன்றாக உற்றுப் பார்த்து அவற்றின் தன்மைகளை யெல்லாஞ் சவ்வையாக நினைவிற் பதித்தல் வேண்டும். அதன் இலைகளின் அமைவையுந் தண்டின் வடிவையும் நினைவில் இருத்தல் வேண்டும். ஒரு கலைமானைப் பார்க்க நேர்ந்தால் அதன் அமைவுகளை உற்றுப் பார்த்து, மற்றவகை மான்களுக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் குறிதவறாமல் நினைவு கூரல் வேண்டும். நண்பர் ஒருவரைப் பார்க்கும்படி நேர்ந்தால் அவருடைய உடம்பின் அடையாளங்களை உற்றுப் பார்ப்பதுடன், அவர் பேசும்போது செய்யும் உறுப்பின் அசைவுகளையும் முகத்தின் நெளிவுகளையுங் கண்ணின் குறிப்புகளையும் மிக நுணுக்கமாக அளந்தறிந்து நினைவில் அழுத்தல் வேண்டும். ஒரு தெருவில் நடக்கும்படி நேர்ந்தால் அத் தெருவின் இருபுறத்தும் உள்ள வீடுகளின் கட்டிடப்பாங்கையும் அத்தெருவின் வளைவுகளையும், அதிற் பிரியுங் கிளை வழிகளையும் முறை பிசகாமல் தெரிந்துணரல் வேண்டும். தாம் நாடோறும் பார்க்கும் மாடு குதிரை முதலான உயிர்களின் வடிவ வேறுபாடுகளையுங் கண்டறிதல் வேண்டும். எத்தனைபேர் மாட்டுக்கு இரட்டைக் குளம்புங் குதிரைக்கு ஒற்றைக் குளம்பும் உண்டென்பதனை அறியாதவர்களாய் இருக்கின்றார்கள்! கொம்புள்ள விலங்குகள் எல்லாம் இரட்டைக்குளம்பு உடை யன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/77&oldid=1576029" இலிருந்து மீள்விக்கப்பட்டது