உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் – 4

அதனால் அப் பாம்பை அடித்துக் கொன்றார் அதன்பின் தம் நண்பரை முடுகி இழுத்துக் கொண்டு அப்பாற் போனார். திருவருட் செயலால் இங்ஙனம் பாதுகாக்கப்பெற்ற அவ்வாள் அவ் வசியமயக்கந் தீர்ந்த பிறகுஞ், சில நேரம் வரையில் நோய்ப்பட்டிருந்தார்.

இன்னும், பாம்புகள் தமக்கு இரையாகத்தக்க உயிர்களைத் தங் கண்களால் தம் வயப்படுத்தி இழுத்து விழுங்கவல்ல வசிய ஆற்றல் மிகுதியும் வாய்ந்தனவாயிருக்கின்றன. இதனை மெய்ப்படுத்துதற்கு உண்மை நிகழ்ச்சிகள் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுதும். ஓர் ஊரிற் கற்றவர் ஒருவர் ஒருகால் தம் நண்பர் ஒருவருடன் ஓர் யாற்றின் பக்கத்தேயுள்ள ஒரு பாட்டை வழியே வண்டியிற் போய்க் கொண்டிருந்தார். பாட்டையோ மிகவுங் குறுகலாய் இருந்தது. ஒரு பக்கத்தில் தண்ணீரும், மற்றொரு பக்கத்திற் புதல்கள் அடர்ந்த செங்குத்தான கரையும் இருந்தன. ஓரிடத்திற் போகையில், அங்கே பலதிறப்பட்ட சிறிய பறவைகள் பல வழியின் குறுக்கே பறந்து போவதுந் திரும்பிப் பறந்து வருவதும் அடிக்கடி கீச்சிடு மொலியோடு வட்டமிட்டுப் பறப்பமாய் இருந்தனவேயல் லாமல், தாஞ் சுற்றிக் கொண்டிருக்கும் அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்து சென்றில. அஃது அவரது கருத்தைக் கவர்ந்தது. அக் கற்றவர்க்கும் அவர்தம் நேசருக்கும் அப் புதுமையை அறிய மிகுந்த ஆவல் உண்டாயிற்று. உடனே, சாலவும் பெரியதான ஒரு கரும்பாம்பு அங்கே வட்டமிட்டுக் கொண்டு தலையை உயரத் தூக்கி மிக்க கிளர்ச்சி யோடுந் தன் கண்கள் மினுமினுவென்று மிளிரத் தன் நாவை அடிக்கடி விரைவாய்ச் சுழற்றிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்பறவைகள் அங்ஙனந் திகிலோடும் வட்டமிட்டுச் சுழலுதற்கு அப்பெரும் பாம்புதான் ஏதுவென்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் ஏறியிருந்த வண்டி கிட்ட நெருங்கும் அரவந் தட்டியவுடனே அப்பாம்பு திடுக்கிட்டுப் புதர்களுட் சன்று மறைந்தது. அப் பறவைகளுங் கலக்கந் தீர்ந்தன. என்றாலும், அவை அவ்விடத்தை விட்டுப் போகாமல், அருகிருந்த மரக்கிளைகளில் இறங்கி இருந்து கொண்டு மறுபடியும் அக்கொடிய பகைப் பாம்பின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

இன்னும், ஓர் ஊரில் ஒருவர் வேனிற்காலத்தில் ஒரு நாள் ஒரு கரிய பறவையையும் அதனை உற்றுப் பார்த்துக் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/87&oldid=1576039" இலிருந்து மீள்விக்கப்பட்டது