உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் – 5

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

மக்களுக்கு

மெய்யறியும் மேன்மைகளும் தரும் வகையில் அடிகளாரின் நீண்ட கால உழைப்பில் உருவானது இந்நூலாகும். தமிழ் நாட்டில் தொலைவி லுணர்தலாகிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தாலும், அவற்றை நடுவுநிலையான் நன்காய்ந்து, மெய்ச்சான்று காட்டி உறுதிப்படுத்துவாரும், நூலெழுதுவாரும் இல்லாத தால் அடிகளாரின் முயற்சி அரிய முயற்சியாகிறது.

காற்று வெளி, நினைவு வெளி, நினைவு இயல்பு, உணர்வு நுட்பம், கடவுளியல்பு கனவு நிலைகள், தெளிவுக் காட்சி ஆகிய பல்வேறு செய்திகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

கேட்போர் இயல்புகளையும், கேட்கும் முறை களையும், கேட்ட பொருளின் நலந்தீங்குகளையும் கருத்தில் கொண்டேகடவுள் கருணை காட்டுவான் என்னும் கடவுள் நெறிக் கருத்துகளையும் உண்மை களையும் அடிகளார் இந்நூலில் விளக்கியுள்ளார்.

பன்னாளும் பன்முறையும் ஆய்ந்தாய்ந்து, நினைந்து நினைந்துமெல்லென நூல் ஒவ்வொன்றும் எழுதும் அடிகளார் இயல்பும் அறியப்பெறுகின்றது.

நா. செயப்பிரகாசு மறைமலை அடிகளாரின்

இலக்கியப் படைப்புகள் - பக்கம் : 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/35&oldid=1576472" இலிருந்து மீள்விக்கப்பட்டது