உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

15

இங்ஙனமே வான்வெளியிலும் ஒளியும் ஓசையும் இயங்கு கின்றனவென்பது அறியற்பாற்று.

இனி, நம் ஐம்புலன்களாலும் அறியப்படும் புறப்பொருள் களுள் ஒளியும் ஓசையும் நாற்றமுமே மிக நுட்பமான பொருள்களாகும்; நுட்பமான பொருள்கள் உலவுதற்கு நுண்ணிய வெளியும், L பரும்படியான பொருள்கள் உலவுதற்குப் பருப்பொருளான நிலமும் வேண்டப்படுகின்றன. ஒளியும் ஓசையும் மிக நுண்ணிய இடைவெளியில் உலவும்; நாற்றங் காற்றில் உலவும். அற்றேல், மின்னுட்பத்தால் உந்தப்படும் ஓசையானது பருப்பொருளான துத்தநாகக் கம்பி வழியே சல்வது என்னையெனின்; அக்கம்பியிலும் நுண்ணிய வான்வெளியே நிறைந்திருத்தலின், அங்கும் அஃது அவ் வெளியிலேதான் செல்கின்றதென உணர்க. அவ்வாறாயின் வான்வெளியிற் செல்லும் அவ்வோசையைக் கம்பிவழியே செலவிடுத்தல் ஏன் என்றால், வறிதே வான்வெளியில் அவ்வோசையைச் செல்லவிட்டால் அவ்வெளி எங்கும் அது சிதறிப்போகுமாதலால், அஃது அங்ஙனஞ் சிதறாமைப் பொருட்டுக் கம்பி அவ் விடைவெளியில் ஒரு சிறு பகுதியைத் தன்னுள் வைத்து அவ்வோசை ஒரு வழியே செல்ல உதவி புரிகின்றது. அது போக, அமெரிக்காவிலுள்ள நுண்ணறிவாளர் இப்போது கம்பியில்லாமலும் வெறும் வான்வெளியிற் செய்தி விடுக்கக் கற்றிருக்கின்றார்களாகலின், ஓசையானது நுண்ணிய வான்வெளியிலேதான் எங்குஞ் செல்வதென்பது மறுக்கலாகாத உண்மையேயாம் என்க. இனி ஒளியும் இவ்வாறே இடை வெளியில் உலவும் உண்மையும் அறியற்பாற்று.

இனி, நாற்றமோ ஓசை ஒளி இரண்டினுஞ் சிறிது பரும்படியான பொருளாகையால், அது தனக்கேற்ற காற்றிலே உலவுதல் செய்கின்றது. காற்றானது வான் வெளியைவிடப் பரும்படியான பொருளாகையால், அது தன்னிடத்தில் நாற்றமானது நடைபெறுதற்கு இடந்தருவதாயிருக்கின்ற தென்க.

இனி, இவை யொழியக் கல் மண் மரம் நீர் முதலிய பொருள்கள் எல்லாம் நிலத்திலே மட்டும் இயங்கவல்லன. அவ்வாறாயிற், புறவு பருந்து முதலான பறவைகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/48&oldid=1576489" இலிருந்து மீள்விக்கப்பட்டது