உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

❖ - 5 மறைமலையம் – 5

நாடும். ஒருவன் திருடுதல் கொல்லுதல் பொய் சொல்லுதல் முதலான தொழில்களைச் செய்தலிலேயே கருத்தூன்று வனாயின், அவன் மனம் அத்தகைய நினைவுகளால் மிகவும் அழுக்குப்பட்டுத் தனக்கு இயைந்த அழுக்கான நினைவுகளையே ரைவில் ஏற்றுக்கொள்ளும்; வேறு நன்னினைவுகளைச் சிறிதும் ஏற்றுக்கொள்ள மாட்டாதாகும். தன்னைப் போலவே நிலவுலகத்தில் உயிரோடிருக்குந் தீயவர் நினைவுகளையும், நிலவுலகத்தை விட்டு இருள் உலகத்திற் சென்ற தீய பேய்களின் பொல்லாத நினைவுகளையும் எளிதிலே ஏற்றுக்கொண்டு அவற்றால் அவன் அளவிறந்த துன்பத்தை அடைகுவன். தீய பேய்களினாற் பிடிக்கப்பட்டு வருந்துவோர்களை ஆராய்ந்து பாருங்கள்! அவர்கள் எவ்வளவு அழுக்கான செய்கையும் நினைவும் உணவு முதலியனவும் உடையவர்களாய் இருக்கின் றனர்! அவர்கள் இருக்கும் வீடுகளிற் சென்று பார்த்தால் அவை எவ்வளவு தீ நாற்றமும் அழுக்கும் மிகுந்து பார்ப்பவர்க்கு அருவருப்பை விளைவிக்கின்றன! அவர்கள் உணவாகக் கொள்ளும் இறைச்சி முதலியவற்றின் அருவருப்பை என்னென்று சொல்வேம்! நாம் ஆராய்ந்து பார்த்த வரையில் ஒரு வரை துறையின்றி ஊன் உணவுகொண்டு அருவருப்பு மிகுந்து திரிவோர்களையே தீய பேய்கள் பற்றிக்கொள்கின்றன. இந் நிலவுலகத்தில் இருந்த காலத்து மிகவும் பொல்லாங்குடையவர் களாய், வேண்டு மட்டும் இறைச்சி தின்பதில் விருப்பம் மிகவைத்து நாளைக் கழித்து இறந்தொழிந்தவர்கள், நுண்ணுடம்பிற் சென்ற பிறகுந் தமது பொல்லா நினைவு தம்மைவிட்டு அகலாமையின் தமது அவாவினால் இழுக்கப் பட்டுப் புலால் நாற்றம் வீசும் இறைச்சிக்கடைகளைச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பர். அவ்வாறு திரிந்து கொண்டிருக்கும் அப்பேய்கள் தம்மைப்போலவே பொல்லாங்கு உடையவர்களாய் இறைச்சி வாங்க வருவோரைக் கண்டாற் பிடித்துக் கொள்ளும். ற் இவ்வுண்மை, பேயாடுவோரிடத்திலேயே கேட்டுத் தெளியலாம். ஆவி வந்தேறி ஆடும்போது, “நான் கள்ளுக்கடை முடுக்கிலே இவள் மீன் வாங்கி வரும்போது இவளைப் பின்றொடர்ந்து வந்தேன்,” என்றும், “நான் இறைச்சிக் கடையிலே ஒரு மாலை வேளையில் இவளைப் பிடித்துக் கொண்டேன்," என்றுஞ் சொல்லுஞ் சொற்கள் நாங் கூறுவதன் மெய்ம்மையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/53&oldid=1576499" இலிருந்து மீள்விக்கப்பட்டது