உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் – 5

நிற்றலால், அதன்கண் அடுத்து நிகழும்

எண்ணங்கள்

மட்டுமேயன்றி மிகவுந் தொலைவிற் றோன்றும் எண்ணங்களும் விரைவிலே வந்து தோன்றாநிற்கும்; முற்காலத்தும் இக் காலத்தும் இனிவருங் காலத்தும் நிகழும் நிகழ்ச்சிகள் அத்தனையுந் தெளிவுள்ளம் உள்ளவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெற்றென விளங்கா நிற்கும். ஆகையால், இத்துணைச் சிறந்த முக்கால வுணர்ச்சியாகிய அரும்பெரும் பேற்றை அடைய விரும்பும் நல்வினையுடையார் ஒவ்வொரு வருந் தமது மனத்தைத் தெளிவுபட வைத்தலாகிய அரும்பெரு முயற்சியை அடுத்தடுத்துச் செய்துவரல் வேண்டும்.

தாம்

இனி,நன்னினைவின்வழியே உள்ளத்தை வைத்துப் பழக்கும் முறைதான் யாதோவெனின்; அதனையும் ஒரு சிறிது இங்கே விளக்கிக் காட்டுவாம். இன்பந் தராத நினைவுகளைப் பற்றிநிற்கும்படி மனத்தை ஏவினால் அதற்கு அஃது எளிதிலே மடங்கி நில்லாமல் வருத்தத்தை விளைவிப்பதோடு, இத்தன்மையவான பழக்கங்களில் அவனுக்கு வெறுப்பினையும் பின்னர்த் தோற்றுவிக்கும். ஆகவே, அதனை அங்ஙனம் பழக்குவதற்கு முயலல் ஆகாது. இயல்பாகவே அஃது எந்த நன்னினைவை மகிழ்வொடு பற்றி நிற்குமோ அதனை அறிந்து அதன்கண்ணே அதனைப் படிவித்தல் வேண்டும். அங்ஙனம் அஃது இயல்பாகப் பற்றி நிற்கும் நிற்கும் நினைவுகள் யாவையோவெனின், அவை அதற்கு ஆரா மகிழ்ச்சியினையும் பெருங்களிப்பினையுந் தோற்றுவிப்பனவேயாம் என்க. மகிழ்வினையும் உள்ளக் கிளர்ச்சியினையும் ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு வகையாற் பிறப்பிக்கும் நன்னினைவுகள் பற்பல இருப்பினும், அவை எல்லாவற்றுள்ளும் அழகு, அறிவு, அன்பு என்னும் மூன்று தன்மைகளைப் பற்றிய நன்னினைவுகளே எல்லார்க்கும் எவ்விடத்தும் எக்காலத்தும் பெருங் களிப்பினைத் தருவனவாமென்பது அனைவரானும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையேயாம். அழகு முதிரச் சலவைக்கல்லில் திருத்திய ஓர் அரிய வடிவத்தையேனும், இயற்கை நிறங்கள் முகிழ்த்துத் தோன்ற ஓவியக்காரன் முனைப்பாகத் தீட்டிய ஓர் இனிய ஓவியத்தின் உருவத்தையேனும், அழகு கனிந்தொழுக உலவுஞ் சிறுவர் சிறுமியரையேனுங் கண்டு களிப்படையாதார் உளரோ? அமைந்து நிரம்பின கல்வியுடையோன் தோண்டுந்தோறுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/63&oldid=1576584" இலிருந்து மீள்விக்கப்பட்டது