உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

  • மறைமலையம் – 5

ஏதேனுமொரு பொருளையே நினைக்க வேண்டிவரும்; அறிவு என்னும் பண்பை நினைக்கப் புகுந்தால் அதுவுந் தனித்து நில்லாத பண்பேயாகலின் அதனையுடைய ய அறிஞன் ருவனையே நினைக்கவேண்டி வரும்; இங்ஙனமே அன்பு என்னும் பண்புந் தனியே நினைக்கப்படுவ தல்லாமையால் அதனை நினைக்குமிடத்தெல்லாம் அன்புள்ள ஒருவனையே நினைக்க வேண்டி வரும் என்க. அதுவேயுமன்றிப், பண்பு பண்பையுடைய பொருளும் எவ்வாற்றானும் பிரிவுபடாமல் ஒன்றுபட்டே நிற்கும் இயல்புவாய்ந்தனவாம்; பண்பு அழிந்தால் அதனோடு ஒன்றாயுள்ள பண்பியும் அழியும், பண்பியழிந்தால் அதனின் வேறல்லாத பண்பும் அழியும். ஆகவே, பண்பிப் பொரு ளினும் பண்பே நுண்ணியதாகலின் அப் பண்பை மட்டுமே நினைவிற்குக் கொண்டுவர முயல்வே மென்றுங், கடவுளை முகங்கைகால் முதலான உறுப்புகளுடைய ஓர் உருவப் பண்பிப் பொருளாக வத்து வணங்கக் கடவேம் அல்லமென்றும் உரைப்பார் உரை ஒரு சிறிதும் பொருந்த மாட்டாதென் றுணர்க. பண்புகளை நினைக்கப் புகுவார் எல்லார்க்கும் அப் பண்புகளின் வேறல்லாத பொருள் உடனே நினைவிலெழப் பெறுதல் மாறா இயற்கையாக இருத்தலின்,மிக நுண்ணிய பண்பு நிலையில் வைத்துக் கடவுளை வழிபடுவே மென்பார்க்கும் அப் பண்புகள் திரண்ட பிழம்பான கடவுளின் றிருவுருவம் அவருள்ளத்தில் தோன்றாமற் போதல் இல்லை யென்க. பண்பென்றும் பண்பியென்றும் வேறு பகுத்துணர்தற் கியலாமற் பிரிவின்றி நிற்கும் ஒரு பொருளிற் பண்பை மட்டும் நினைக்கப் புகுவேம் என்றும், பண்பியை மட்டும் நினைக்கப் புகுவேமென்றுந் தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொருளினி யற்கைக்கு மாறாகப் பேசுவோர் உண்மை தெரியமாட்டாத மடவோரே யாவர். அங்ஙனமன்று, பண்பு பண்பியினின்று பிரியாதாயினும், நினைவின்கண் அதனைப் பிரித்து நினைக்க மாட்டுவே மெனின்; எப்பொருள் எத்தன்மையதாயிருக்கின்றது, அப் பொருளை அத்தன்மைபட நினைதலே மெய்ந் நினைவு அல்லது ‘சத்தியபாவனை' யென்று சொல்லப்படும்; இவ்வா றன்றி ஒரு பொருளை அப்பொருளின் கண் நிகழாத நிகழ்ச்சி பற்றி நினைப்பது பொய்ந் நினைவு அல்லது 'அசத்தியபாவனை' யென்று சொல்லப்படும். இனி, மெய்ந் நினைவு உண்மையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/65&oldid=1576601" இலிருந்து மீள்விக்கப்பட்டது