உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் – 5

திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவுருவம், அழகு அறிவு அன்பு என்னும் மூன்று தன்மைகளொடு குழந்தைப் பொழுதே எல்லா அறிவும் முதன்மையும் நிரம்பின தெய்வத் தன்மையும் பொருந்தப்பெற்ற விழுப்பம் உடையதாகலின், அவ்வருமைத் திருவுருவை இடையறாது நினைவிற் காண்டு

வந்து பழகும் நற்பெரும் பழக்கம் மனவுணர்வை நுட்ப மாக்குதற்கு மிக இயைந்த தொன்றாமென்பது கடைப்பிடிக்க.

இனி, எல்லையற்ற அழகும், எல்லையற்ற அறிவும், எல்லையற்ற இன்பமும் உடைய உயிர்ப்பொருள் கடவுளை யன்றி வேறொன்றும் இல்லையென்பது திண்ணமாகலானுங், குற்றம் என்பது அணுத்துணையும் இல்லாத அறிவுடைய உயிர் கடவுள் ஒன்றே என்னும் உண்மை எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தொன்றாகலானுந், தமதுணர்வை மிகவும் நுண்ணிதாக்க வேண்டும் என்னுங் கருத்துடையார் எல்லாருங் கடவுளின் திருவருளுருவை எந்நேரமும் ஒழிவின்றி நினைவுகூர்ந்து வரல் வேண்டும். இங்ஙனம் நினைக்குங்காலும் அவ்வருளுருவை எல்லா அழகும் எல்லா அறிவும் எல்லா இன்பமும் நிறைந்து ஒளிதுளும்புந் திருந்திய வடிவினதாக நினைந்து, அந் நினை வின்கட் பெரிதும் இன்புறுதற்குப் பழகுக. இப் பழக்கங் கைவந்து உயிரின் நினைவு அதிற்றோய்ந்து அவ்வண்ணமாயபின் எக்காலத்து நிகழ்ச்சிகளையும் எவ்வுலகத்து நிகழ்ச்சிகளையும் அஃது எளிதிலே ஒருங்குணர வல்லதாகும். இவ்வருளுருவ வழிபாட்டில் தலை நின்றவர் யாவரே யாயினும் அவர் அழகு அறிவு அன்பு என்னும் அவ்வருமைத் தன்மைகள் நிறையப் பெற்றவராய்த் துலங்குவர். பண்பும் பண்பையுடைய பொருளுந் தம்முட் சிறிதும் பிரிதல் இல்லாத தற்கிழமைப் பொருத்த முடையன வன்றும், அவற்றுள் ஒன்றை நினைக்கவே மற்றொன்றுந் தானாகவே நினைவில் எழுமென்றும் முன்னரே நன்கு விளக்கிக் காட்டின மாகலின், அவ் வருளுருவத்தைப் பற்றிய நினைவானது தன்னுட் பொதிந்த அவ்வருமை இயல்புகளைத் தானே தோற்றுவிக்கு மென்பது மறுக்க ஏலாத உண்மை நிகழ்ச்சியேயாகும். இக் காலத்து உளநூற் புலவர்கள் ஆராய்ந் துரைக்கும் முடிபுகளும் பொருளை நினைக்கும் நினைவு அப்பொருட் பண்புகளையும் உடனே தோற்றுவிக்குமென நாட்டுகின்றன. அறிஞரான ஜிபோட்டோ என்னுந் துரைமகனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/67&oldid=1576617" இலிருந்து மீள்விக்கப்பட்டது