உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

105

பாங்கிமார் இருவரும் : ஐய! வேனில்விழா நடக்க வொட்டாமல் அரசன் நிறுத்திவிட்டது ஏதுகாரணத்தா லென்று தெரிந்துகொள்ள ஆவலுடையேமாயிருக்கின்றேம். அதனை நாங்கள் கேட்டறிவதிற் குற்றமில்லையென்றால் தாங்கள் அதனை எங்கட்குச் சொல்ல வேண்டுகிறோம்.

சானுமதி : ஆடவர்கள் விழாக்கொண்டாடுவதில் உண்மையிலே விருப்பமுள்ளவர்கள்; ஆகையால், காரணம் இருக்கவேண்டுந்தான்.

ஏன்

தக்க

கஞ்சுகி : இது பலருக்குந் தெரிந்ததுதான் ; உங்களுக்கு அது சொல்லப்படாது? சகுந்தலையை ஏற்றுக் காள்ளாமல் தள்ளிவிட்ட பழிச்சொல் உங்கள் காதுக்கு எட்டவில்லையா?

இருவரும் : கணையாழி அகப்பட்டவரையில் அரசன் மைத்துனர் வாயினாற் சொல்லக் கேட்டேம்.

கஞ்சுகி : அப்படியானாற் சொல்லவேண்டியது இன்னுஞ் சிறிதுதான் உள்ளது. தனது கணையாழியைக் கண்டவுடனே தான் சகுந்தலையை முன் மெய்யாகவே மணம்புரிந்ததை நினைந்துகொண்டு, பின் மிக்க மறதியினால் அவளை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிவிட்டதைப் பற்றி மன்னன் நிரம்பவும் மனம் நைந்திருக்கின்றார். அதனாலே,

இன்பநுகர் பொருளெல்லாம் வெறுத்து விட்டார்

இனியநூல் அமைச்சரையுங் கலவார் முன்போற்

கண்ணுறக்கம் இரவெல்லாம் பெறமாட் டாராய்க் கட்டில்மிசை யிங்குமங்கும் புரளு கின்றார்

தன்பெரிய மனைநல்லார் பேசும் போது

தண்மையினாற் சிலசொல்லுஞ் சொல்லி னுள்ளும்

பெண்ணரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லிப் பெரிதுவரும் நாணத்தாற் கலங்கு கின்றார்.

சானுமதி : எனக்கு இது நல்ல செய்தியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/136&oldid=1577230" இலிருந்து மீள்விக்கப்பட்டது