உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

சாகுந்தல நாடகம்

121

சானுமதி : இப்போது உமது கால்வழி இடையறாது தொடர்ச்சியாய் இருக்கப் போகின்றது.

சதுரிகை : (பிரதீகாரியை நோக்கி) வணிகச் செட்டி யாரைப்பற்றிய இச் செய்தியால் வேந்தன் மிகுந்த துயரம் அடைந்திருக்கின்றார். ஆகையால், இவருக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு நீ போய் மேகப்பிரதிச்சந்த அரண் மனையிலிருக்கும் மாட்சிமை தங்கிய மாதவியரை அழைத்து

QUIT.

பிரதீகாரி : நல்லது சொன்னாய். (அழைக்கப் போயினாள்.) அரசன் : ஐயோ!

பிள்ளையில்லாக் கொடியேனாற் பெயப்பட்ட எண்ணீரைப் பிதிரர் கண்டு

தள்ளாத முறைப்படியே யிவன்பின்னே தகுநீரு மெள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலியெனவே கொடுப்பாரா ரெனக்கூறி யுகுங்கண் ணீரோ

டள்ளியே யுண்பாராற் பலிபெறுவோர்

ஐயமுற லாயிற் றந்தோ!

(மெய்ம் மறந்திருக்கின்றான்.)

சதுரிகை : (கதுமென அரசனைத் தாங்கி) பெருமானே! மனந்தளராதீர்கள்! மனந்தளராதீர்கள்!

சானுமதி : ஆ! ஆ! விளக்கிருந்துந் திரை மறைத்தலினால் இருளிலே கிடந்து இவர் வருந்துகின்றார்! இப்போது இவரை நான் மகிழ்விக்கின்றேன்.அல்லது அப்படித்தான் செய்வானேன்? பெரிய இந்திரன் அன்னையார், சகுந்தலையை ஆற்றுவிக்கும் பாழுது "வேள்விப்பலியைப் "வேள்விப்பலியைப் பெறவிரும்பித் தேவர்கள் தாமே, தான் முறைப்படியே மணந்துகொண்ட மனையாளைக் கணவன் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் படி செய்விப்பார்கள்” என்று சொல்லியதைக் கேட்டிருக்கின்றேன். அதுகாறுங் காத்திருத்தலே தக்கது. இதற்கு இடையில் நான்போய் இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/152&oldid=1577366" இலிருந்து மீள்விக்கப்பட்டது