உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் -6

மாதலி : (குதிரைக் கலினங்களை இழுத்துப் பிடித்து) வேந்தர் பெருமானே! அதிதியால் வளர்க்கப்பட்ட மந்தார மரங்கள் நிறைந்த காசியபரின் தவப்பள்ளியினுள்ளே இப்போது புகுந்துவிட்டோம்.

அரசன் : துறக்க நாட்டினும் இஃது இனியதாயிருக் கின்றதே! இப்போது நான் தேவாமிழ்தம் நிரம்பிய வாவியில் முழுகினவன் போலாயினேன்.

மாதலி : (தேரை நிறுத்தி) நீடுவாழ்வீர்! இறங்கலாம்.

அரசன் : (கீழ் இறங்கி) நீர் யாது செய்யப்போகின்றீர்? மாதலி : தேரை நிலையாய் நிற்கும்படி செய்து விட்டேன். நானுங் கீழ் இறங்குகின்றேன். (அவ்வாறே செய்து) நீடுவாழ்வீர்! இவ்வழியே இவ்வழியே வருக. (நடந்து சென்று) மாட்சி நிறைந்த முனிவருக்குந் தவப் பள்ளிகளை நீர் காணலாம்.

அரசன் : உண்மையிலே நான் வியப்பொடுதான் பார்த்து வருகின்றேன்.

வேட்பன தரூஉங் கற்பகம் பொதுளிய அடவியிலிருந்தும் மற்றிவர் ஆர்வது நடைபெறுந் தூய வளியே; முடவிதழ்ப் பொற்றா மரையின் நற்றா துகுதலிற் பழுப்புருத் தோற்றும் விழுத்தட நீரே பொழுதுமா றாதிவர் முழுகுதீம் புனலே; வீழ்ந்தொரு குறியில் ஆழ்ந்திவ ரிருப்பதும் விளக்கம் வாய்ந்த மணிக்கன் மிசையே; அரம்பை மாதரார் மருங்குறப் பெற்றும் ஐம்பொறி யடக்குமிவர் மொய்ம்புமிகப் பெரிதே; இந்நற் றவர்பால் மன்னுமிப் பொருள்கள்

ஏனை முனிவரும் விழைவுற்

றானது நோற்கும் அருமைசான் றனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/161&oldid=1577442" இலிருந்து மீள்விக்கப்பட்டது