உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் 6

ளையாடுவதற்காக அதன் தாயினின்றும் அதனை வலிந்து இழுக்கின்றவனும், பிள்ளைகட்கில்லாத வலிமையுடைய வனும், முனிவர் மகளிராற் பின்றொடரப்பட்டு வருபவனுமான இச்சிறுவன் யார்?

(மேற்சொன்ன வண்ணமாய் முனிவர் மகளிரோடும் ஒரு குட்டியை இழுத்துக்கொண்டு ஒரு சிறான் வருகின்றனன்.) சிறுவன் : ஏ அரிமான்குட்டியே! வாயைத் திற, நான் உன் பற்களை எண்ணுகிறேன்.

முதல் மாதர் : அடே பட்டிப்பையா! எங்கள் பிள்ளையின் வேறாகக் கருதாமல் நாங்கள் வளர்த்துவரும் இந்த விலங்கை நீ ஏன் வருத்துகின்றாய்? வரவர உனது பட்டித்தனம் மிகுதிப் படுகின்றதே! உனக்குச் சர்வதமனன் (எல்லாவற்றையும் அடக்கி யாள்பவன்) என்று துறவிகள் பெயர் கொடுத்தது பொருத்தமாகத்தா னிருக்கின்றது.

அரசன் : என் மகனைப்போல் இச்சிறுவனை ஏன் என் மனம் விழைவுறுகின்றது?

பிள்ளைப்பேறு

விளைக்கின்றது!

உண்மையாகவே எனக்குப் ல்லாமையே இவ்வாறு அன்பினை

இரண்டாம் மாதர் : அதன் குட்டியை நீ விடாவிட்டால் இதன் தாய் திண்ணமாய் உன்மேற் பாயும்.

சிறுவன்

ஓ! அம்மா! நான்

நிரம்பத்தான்

அஞ்சுகின்றேன்! (கீழ் உதட்டைப் பிதுக்குகின்றான்.)

அரசன் : (கொழுந்து விட்டெரிகிறதற்கு) விறகை நாடும் நெருப்பானது ஒருசிறு தீப்பொறியின்நிலையி லிருத்தல் போல், இப் பையனும் ஏதோ ஓர் உரமான சுடரின் வித்துப்போற் காணப்படுகின்றான்.

முதல் மாதர் : குழந்தாய்! இந்த அரிமான் குட்டியை விட்டுவிடு. உனக்கு வேறொரு விளையாட்டுக்கருவி கொண்டு வந்து தருகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/163&oldid=1577460" இலிருந்து மீள்விக்கப்பட்டது