உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் -6

அதனாலன்றோ, என்

கணவனுக்கு அந்த மோதிரங் காட்டப்படுதல் வேண்டுமென என் றோழிமார்களால் அத்தனை ஆவலொடு கற்பிக்கப்பட்டேன்.

மாரீசர் : குழந்தாய்! இப்போது நீ உண்மை அறிந்தனை. நின் காதலன்மேல் நீ வெறுப்புக் கொள்ளலாகாது. பார்! அத் தீமொழியாலன்றோ நீ நீக்கப்பட்டாய். நினைவு மறைப்பினால் நின்பாற் கொடுமை செய்த நின் கணவன் பால் மறதியென்னும் இருள் இப்போது ஒழிந்தமையால், மட்டுமே இப்போது அவற்குக் காதன்மனைவியாயினை. மேலே அழுக்குப் படிந்த தனால் ஒளிமங்கிய கண்ணாடியில் உருநிழல் தெளிவாகத் தோன்றாவிடினும் அது துடைக்கப் பட்ட வழி அந் நிழல் நன்கு விளங்கித் தோன்றுகின்ற தன்றோ?

அரசன்: பெருமான் சொல்லுமாறேதான்.

மாரீசர் : குழந்தாய்! நம்மாற் பிறப்புச் சடங்குகளெல்லாம் முறையே செய்யப்பெற்ற சகுந்தலையின் மகனை இதோ களிப்பொடு ஏற்றுக்கொண்டாயென்று நம்புகின்றேன்.

அரசன் : பெருமானே! என் குடி நிலைபெறுவது இவனிடத்திலேதான் அமைந்திருக்கின்றது.

மாரீசர் : அங்ஙனமே, இனி இவனே மன்னர் மன்னனா வானென்று அறிவாயாக! பார்! இவன் இடையே தெற்றுப்பட்டுக் குலுங்காமற் செல்வதாகிய தேர் மேலமர்ந்து மாகடலைக் கடந்து, தனக்கு நிகரில்லாமல், ஏழு தீவகங்களோடுங் கூடிய இந் நிலவுலகத்தை வெற்றி கொள்வான். இங்கே விலங்குகளை யெல்லாம் வலிந்து அடக்கியது பற்றிச் சாவதமன னென்று பெயர்பெற்ற இவன், மறுபடியும் உலகைத் தாங்கப்போவது பற்றிப் பரதன் என்றும் பெயர் பெறுவான்.

அரசன் : அடிகளால் எல்லாப் புனிதச் சடங்குகளும் செய்யப்பெற்ற இவனிடமிருந்து நாங்கள் எல்லாம் எய்த எதிர்பார்க்கின்றோம்.

அதிதி : பெருமானே! தம் புதல்வியின் விருப்பமெல்லாம் நிறைவேறப்பெற்ற வகைகள் கண்ணுவமா முனிவர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/175&oldid=1577560" இலிருந்து மீள்விக்கப்பட்டது