உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

151

சூத்திரதாரன்' என்பான் ஒரு கதை தழுவிவருங் கூத்தினை நாடக அரங்கிற் கூத்தர் பலரைக் கொண்டு நடத்திக் காட்டும் முதல்வன் ஆவன்.பண்டைநாளில் தோற்பாவை மரப்பாவை களைக் கயிற்றிற்கோத்து ஆட்டுவது வழக்கமாதலின், அங்ஙனம் அவற்றை ஆட்டுவோன் ‘சூத்திரதாரன்' எனப் பெயர் பெற்றான். சூத்திரம் கயிறு. தாரன் - தாங்குவோன். பின்னர்க் கூத்தர்களைத் தன் அறிவு என்னுங் கயிற்றாற் கட்டி ஆட்டுந்தலைவனும் அப் பெயர் பெற்றான் என்க.

-

முதல் வகுப்பு

(பக். 4) இந்நாடகக்கதை

கக்கதை ஏழு

வகுப்புகளாகப்

பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவற்றுள் இம் முதல்வகுப்புத் துஷியந்தன் என்னும் அரசன் வேட்டம் ஆடும்பொருட்டுத் தேர்மீதிவர்ந்து புள்ளிமான் ஒன்றைப் பின்றொடர்ந்து ஒரு கானகத்திற் புகுதலும், அஃது அருந்தவத்தோர் உறையுளா யிருத்தல் கண்டு, மானை விடுத்துத் தேரினின்றுங் கீழிறங்கி உட்சென்றவன், சகுந்தலையும் அவடன் தோழிமாரிருவரரும் பூஞ்செடிகட்குத் தண்ணீர் விட்டுக் கொண்டு வருதலைப் பார்த்து, மரச்செறிவின் மறைவிலிருந்து அவர்களை உற்றுநோக்கிச், சகுந்தலையின் பேரழகை வியந்து அவள்மேல் அளவிறந்த காதல் கொண்டவனாய், வண்டோச்சும் முகத்தால் அவர்பாற்சென்று அவரோடு உரையாடுகையில், அக் கானகத்தைக் கலக்கி ஓடிவரும் ஒரு யானையை எய்யும்பொருட்டு, அம்மாதர் மூவரையுந் தமது இருப்பிடத்திற்குச் செல்ல விடுத்து, அவரை அன்றைக்குப் பிரிந்துசென்று தன் கூடாரத்தின்கண் ஆற்றனாய் வருந்தியிருக்கும் வரையிற் கதையின் துவக்கப்பகுதி யினை நடத்திக் காட்டுகின்றது.

களம் - நாடகக் கதை நிகழ்ச்சிக்குரிய இடம்.

துஷியந்தன் நாண் ஏற்றிய வில்லைக் கையில் ஏந்தி ஒரு மானைப் பின்றொடரும் நிலைக்குச், சிவபிரான் வில்லேந்திக் கொண்டு வேள்வியாகிய மானைத் தொடர்ந்து சென்றமை யினைத் தேர்ப்பாகன் உவமையாகச் சொல்லுகின்றான். மாபாரதம், சௌப்திக பர்வத்தில்,784-இலிருந்து 808-வரையிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/182&oldid=1577619" இலிருந்து மீள்விக்கப்பட்டது