உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

163

ஒருப்பட்டு, அவர் வேண்டியவாறே செய்ய முயல்கின்றான். அந் நேரத்தில் அரசன்றன் அன்னையிடமிருந்து அரசனை உடனே நகரத்திற்குத் திரும்பி வரும்படி ஒரு செய்தி வருகின்றது. தன் அன்னை நோற்ற நோன்பின் முடிவிற் செய்யப்படுங் கிரியை களைத்தான் உடனிருந்து நடப்பித்தல் இயலாதிருத்தலையுந், தனக்காக மாதவியனே அவற்றை உ னிருந்து நடத்துவான் என்பதனையுந் தெரிவித்து, அரசன் மாதவியனைத் தனது நகரத்திற்குப் போக்கி விடுகின்றான். என்று துவரையில் இக்கதை நிகழ்ச்சி இவ்விரண்டாம் வகுப்பில் முடிகின்றது.

அலந்துபோன

இளைப்புற்று வருந்தின.

நெடுவழி

அலைந்தமையால்

‘விதூஷகன்’ என்பான் அக்காலத்து அரசர்கள்பால் அணுக்கனாயிருந்து பகடி செய்து அரசனை மகிழ்விப்போன். இவன் அணிந்திருக்கும் ஆடையும் இவன்றன் கூன் உடம்பும், கோமாளிப் பேச்சும் இவனைப் பார்ப்பவர்க் கெல்லாம் பருநகைப்பினையும் L மகிழ்வினையுந் தரும். இவன் பரும்பாலும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவன் ஆவன். தலைமகனுந் தலைமகளுங் காதலுற்று மருவுதற்கு டையின்று உதவி செய்தலும் இவற்கு உரித்தாகும். இவன் இந் நாடகக் கதை நிகழ்ச்சியில் தொடர்புடையனாய் நின்று, அது நடந்து செல்லுதற்கு ஒரு கருவியாய் நிற்றல் காண்க.

அந்நாளில் வடநாட்டின் மட்டுமேயன்றித் தமிழ் நாட்டகத்தும் அரசர்க்குப் பாங்கராயிருந்து, அவர்தங் காதலொழுக்கத்திற்குத் துணைபுரிந்தார் பார்ப்பன ரேயாதல், காமநிலை யுரைத்தலுந் தேர்நிலை யுரைத்தலுங்

கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலும்

செலவுறு கிளவியுஞ் செலவழுங்கு கிளவியும்

ஆவொடு பட்ட நிமித்தங் கூறலுஞ்

அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய

(கற்பியல், 36)

என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/194&oldid=1577677" இலிருந்து மீள்விக்கப்பட்டது