172
மறைமலையம் -6
தகைக்கப்பட்ட-தடுக்கப்பட்ட ஈடுபடுதல் - பதிந்திருத்தல்.
(பக். 42) தொல்லை - தொந்தரவு.படைஞர் - சேனைவீரர். 'பயல்' என்பது சிறுவன் என்னும் பொருட்டு, இங்கே அறிவிற் சிறியவன் என இழிவுப் பொருளில் வந்தது. பேதை அறிவின்மை. மதி புத்தி.
-
மூன்றாம் வகுப்பு
-
ய
(பக். 43) இளமரக்கா - இளைய மரங்களையுடைய சோலை. குசைப்புல் தருப்பைப்புல். மாட்சிமை - அறிவொழுக்கங்களால் உண்டாகும் பெருமை. உங்கார ஓசை - உம் என்று எழும் நாணின் ஒலி. வெருட்டுதல் - அச்சுறுத்தி ஓட்டுதல். வேய்மைக்கண் - தூரத்தில். எற்றுக்கு - எதுக்கு. இருத்துவிக்குகள் - வேள்வியை நடத்தும் ஆசிரியர்கள். நரந்தம்புல் - நறுமணங் கமழும் ஒருவகைப்புல்; இது பெரும்பாலும் மலைகளின்மேல் வளரும்; திருப்பரங் குன்றமலையில் மிகுதியாய் உளது. தூயதீம்புனல் - பரிசுத்தமான இனிய நீர்.
-
(பக். 44) “தவத்தின் பெருமை இன்னதென்பதும் நான் அறிவேன்; அப் பெண் தன் விருப்பப்படி நடக்கக் கூடாத வளென்பதும் நான் அறிவேன்” என்று அரசன் கூறியது? தன் விருப்பப்படி நடக்கக்கூடாத சகுந்தலையைத் வலுக்கட்டாயஞ் செய்தால் தவத்திற் சிறந்த கண்ணுவமுனிவர் சாபத்தால் தான் அழிக்கப்படுதல் திண்ணமென்பதனை நினைந்து சொன்னதாகும்.
(பாட்டு) களிவளர்
க
தென்கொலோ!
தான்
இதன் பொருள் : களிவளர் - மகிழ்ச்சியினை மிகுதிப் படுத்துகின்ற அல்லது, மகிழ்ச்சி மிக்க அல்லது, காம மயக்கத்தை வளர்க்கின்ற அல்லது, செருக்குமிக்க, கடவுள்ஆம் தெய்வமாகிய, காமதேவனே, எயின்மேல் - நின்வலிமைக்குச் சிறிதும் ஒவ்வாத ஏழையேன்மீது, சிறிதும் நீ இரங்கல் இல்லையால் - சிறிதாயினும் நீ நெஞ்சம் இரங்குகின்றிலை, ஒளிவளர் மலர்க்கணை நிறம் மிகுந்த பூக்களாகிய
-