உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

177

முற்றம் - வாயிலுக்கு எதிரேயுள்ள பரப்பு, பொறை - சுமை. சுவடு - அடையாளம். -அை

(பாட்டு) விழிகளாற்....

கண்ணுறலானே.

(பக். 46) இதன் பொருள்: விழிகளால் பெறூஉம் கண்களைப் பெற்றதனால் அடையும், அழிவு இல் பேர் ல் ன்பம்-கெடுதல் இல்லாத பேரின்பத்தினை, ‘ஆ’ வியப்பிடைச் சொல், பெரிது எய்தினென் - மிகவும் பெற்றேன், 'மாது' 'ஓ': அசை நிலை, தூஉய - பரிசுத்தமான, ஒள்மலர் -ஒளி பொருந்திய பூக்கள், தாஅய வெள்நிறம் கல்மிசை - பரவிய வெண்ணிறம் வாய்ந்த கல்லின்மேல், தோழியர் மருங்கில் சாஅய - தன் தோழி மாரின் பக்கத்தே சாய்ந்து கிடக்கும், என் இன் உயிர்ச்செல்லியைக் கண் உறலான் - எனது இனிய உயிர்க்குச் செல்வமாயிருப்பவளைக் காண்டலினால் என்க; எ: அசை. 'என் இன்னுயிர்ச் செல்வியைக் கண்ணுறலான் விழிகளாற் பெறூஉம் அழிவில்பேரின்பம் ஆ அ பெரிதெய்தினென்' என வினைமுடிவு செய்க.

-

L

(பாட்டு) நறுமண நரந்தம்..

தின்றே.

இதன் பொருள் : நறுமண நரந்தம்

-

-

நல்ல மணத்தை உடைய நரந்தம் புல்லின் அரைப்பை, நகிலம் மேல் திமிர்ந்தும் கொங்கைகளின்மேற் பூசியும், தாமரை நாளம் - தாமரைத் தண்டை, காமரு கையில் அழகிய அல்லது விரும்பத்தக்க கைகளில், காமர் என்பதன் ஈற்றில் உகரச் சாரியை வந்தது. பவளக் கடகம் எனத் துவள வளைத்தும் பவளத்தாற் செய்த வளையலையொப்ப அது துவளுமாறு வளைத்தும், என் ஆர் உயிர்க் காதலி ஓர் அயர்வு உறினும் எனது அரிய உயிரை அனையளான காதலி ஒரு தனித்தளர்வினை அடைந்தாலும், எழில் மிகு செவ்வியன் - அத் தளர்விலும் ஓர் அழகு மிகுகின்ற பதத்தினை யுடையன், 'மாது' 'ஓ' அசை, கழிபெருங்காதல் பயந்த - மிகப்பெரிய காதலன்பு தந்த, ஏதம் உறுநோயும் - துன்பத்தினையுடைய நோயும், சுடுகதிர்க் கனலி அடும்பெரு வருத்தமும் - தீய்க்கும் கதிர்களைச் சொரியும் பகலவன் வருத்தும் பெருந்துன்பமும், ஒன்று என மொழிவராயினும் -

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/208&oldid=1577691" இலிருந்து மீள்விக்கப்பட்டது