உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

181

துயரத்தினையும் அறிவித் தற்கு ஒரு குறியாக அதனைக் கூறினாரே யல்லது, அவன் படுத்துக் கிடக்கையிற் றோளிலுள்ள கடகங் கழன்று கீழிறங்கியதென்று கூறப்புகுந்தா ரல்வர்; என்னை? படுத்துக் கிடக்கையிற் கைகள் தொங்குதல் இல்லாமையாற் றோளில் அணிந்த கடகங் கழன்று முன்கையில் இறங்குதல் ஏலாதாகலின் என்பது. தொழில்களைச் செய்தலாற் கை ‘செய்' எனப்பட்டது.

-

(பக். 51) முடங்கல் -கடிதம். 'எழுதட்டும்' என்பது உலக வழக்கில் வரும் வியங்கோள், எழுதுக என்பது பொருள். படைத்தது நிவேதித்தது. நேர்த்தியான சிறப்பான. ஒத்துக்கொள்ளல் - உடன்படல். பற்று - அன்பின் பிடிப்பு, தவிர்த்தல் விலக்கிவிடுதல்.

-

-

(பாட்டு) உன்மேற்...

வெறுத்தலின்றே.

-

இதன் பொருள் : உன் மேல் பற்று இன்றி உவர்ப்பான் எவன் என உன்னினையோ - உன்மேல் அன்பு இல்லாமல் வறுப்பவன் எவன் என்று நீ நினைத்தனையோ, அன்னான் அத் தன்மையினான், நின் கூட்டம் விழைந்து இங்கு உளான் நினது சேர்க்கையினை மிக அவாவி இவ்விடத்திலேயே இருக்கின்றான்; ஆதலால், அஞ்சும் ஆர் அணங்கே - நின்னை விலக்கி விடுவா டுவானென வீணே எண்ணி அஞ்சா நின்ற பெறுதற்கு அரிய தேவமாதரை ஒத்தவளே, பொன்னான் தனை நயப்போனை மறுப்பினும் திருமகள் தன்னை விரும்புவானிடத்தே செல்வதற்கு இசையாவிடினும்,

-

போவதற்கு அம் மின்னாள் விரும்பப்படுவோன் தானே சல்வதற்கு அத்திருமகளால் விரும்பப்படுவான் ஒருவன், வளை வெறுத்தல் இன்று அத் திருமகளை வெறுத்தல் இல்லை என்றவாறு. எ: அசை.

-

-

முழுமதி - பூரணசந்திரன், உவாத்திங்கள். ஆடை - துணி, 'முன்தானை என்பது ‘தானைமுன்' என்பதன் சொல் நிலைமாறல்; ஆடையின்முனை என்பது பொருள். இயற்ற – ஆக்க.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/212&oldid=1577695" இலிருந்து மீள்விக்கப்பட்டது