உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் -6

இறையனாரகப்பொருள் சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனர் உரைத்த உரையுட் காண்க.

(பக். 82) அரம்பை -தேவப்பெண். பற்றப்பட்ட பிடிக்கப்பட்ட

இம்மையில் இன்பத்தை நுகர்பவனுங் கூட, டை யிடையே மனங்கலங்கித் துன்புறுவது என் என்றால், முற் பிறவியில் நிகழ்ந்த துன்பத்தைப் பற்றிய நினைவு தன்னுள்ளத்திற் பதியப்பெற் றிருத்தலினாலேதான் என்று அரசன் எண்ணு கின்றான். துர்வாசர் இட்ட சாபத்தால் அரசன் சகுந்தலையை முற்றும் மறந்துவிட்டானாயினும், அவள்மேல் தான்கொண்ட காதலுணர்வு மட்டும், பழம் பிறவி நிகழ்ச்சி போல், தன் ஏனை நினைவுகளின் ஊடே ஊடே புகுந்து தன்னுள்ளத்தைக் கலக்குதலை அறியப் பெற்று இங்ஙனங் கருதுவானாயினன்.

-

நிலைபேறு அழியாது நிலைத்து நிற்றல். சார்பு - பற்று. திண்ணம் - மெய்ம்மை. துயரம் -(வடசொல்) கிலேசம்.

6

கஞ்சுகி’ என்போன் அரசன் மகளிர் உறையும் உவளகத்திற் காவலனா யிருப்பவன். ஆண்டின் முதிர்ந்தாரே அங்கு வைக்கப் படுதலின், இவனும் இங்கே தள்ளாத கிழவனாகச் சொல்லப்படுகின்றான். உண்மை பேசுதலும், எந்த அலுவலையுந் திறமையாக முடிக்கும் ஆற்றலும் இவனுக்குரிய இயல்புகள். 'கஞ்சுகம்' என்பது நீண்ட மெல்லிய சட்டை; இவன் அஃது அணிந்திருத்தல் பற்றிக் கஞ்சுகி' எனப் பெயர்பெற்றான்.

அரசன்

-

.

வியப்பு (வடசொல்) அதிசயம். அறம் கூறும் இருக்கை - முறை செய்யுங்கால் அமர்ந்திருக்குந் தவிசு, வடநூலார் இதனைத் 'தருமாசனம்' என்பர்.

(பக். 83) 'சேடன்' என்பது ஆயிரந் தலையுள்ள தொரு பாம்பென்றும், அது தன் ஒரு தலையில் இந் நிலவுலகைத் தாங்குகின்ற தென்றும் புராணங் கூறும். உண்மையால் நோக்குங்கால், இந் நிலவுலகையும் இந் நிலவுலகையும் இதனைப் போல் எண்ணிறந்தனவாயுள்ள உலகங்களையுந் தோற்றுவித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/235&oldid=1577718" இலிருந்து மீள்விக்கப்பட்டது