உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் -6

(பாட்டு) வெங்கதிரின்.....யிதுவே.

இதன் பொருள் : வெம்கதிரின் வெப்பம் -வெவ்விய ஞாயிற்றின் வெப்பத்தை, விரிதலையில் தாங்கி - தமது விரிந்த தலையிலே தாங்கிக்கொண்டு, கீழ் தங்குவோர்க்குத் தண்நிழல் செய்மரம்போல் - தம் அடியில் வந்து தங்குவார்க்குக் குளிர்ந்த நிழலைத் தருகின்ற மரங்களைப் போல, இங்கு நின் இன்பம் குறியாது - இவ்வுலகத்தே நீ நுகர்தற்குரிய இன்பங்களை ஒரு ாருளாகக் கருதாமல், குடிகட்கு - நின் குடிமக்களின் பொருட்டாக, பொங்குதுயர் கொளும் - மிகுந்த துன்பத்தை யடையும், நின் பொலிவாழ்க்கை இது - நினது சிறப்புமிக்க அரசவாழ்க்கையின் தன்மை இப்படிப் பட்டதாயிருக்கின்றது:

ஏ: அசை.

நீ

(பாட்டு) ஒறுக்கும்வலி

து

யண்ணவே.

-

(பக். 85) இதன் பொருள் : ஒறுக்கும் வலி உடைமையால் - தண்டித்தற்குரிய ஆற்றல் இருத்தலால், உண்மைநெறி திறம்புநரை மெய்வழியினின்றுந் தவறி நடப்போரை, மறுக்கின்றாய் - நீ அதனினின்றும் நீக்குகின்றாய்,பிறக்கின்றாய் - வலியிலாரைப் பாதுகாக்கின்றாய். மாறுபடுவோர் வழக்கை - ஒருவர் ஒருவரொடு மாறுபாடுறுவாராய்க் கொண்டுவரும் வழக்கை, அறுக்கின்றாய் - அஃது அறத்தின்பாலது இஃது அல்லாதது என்று ஆராய்ந்து வரையறுக்கின்றாய், அரும் செல்வம் உறுவழிச் சேர் கேள் போலாது - ஒருவர்க்குப் பெறுதற்கரிய செல்வம் வந்தடைந்த காலத்து அவர்பால் வந்து சேரும் உறவினர் போலாமல், அறக்கிழமை குடிகள்மேல் அருள்கின்றாய் அண்ணலே -அறம் (தருமம்) ஆகிய உரிமை யினை நின் குடிமக்கட்கு அளித்து அருள் செய்கின்றாய் பெருமானே என்றவாறு.

செல்வம் உள்வழி ஒருவர்பால் வந்து சேர்தலும், அஃது அற்றவழி அவரைவிட்டு நீங்குதலுஞ் செய்யும் உறவினர் அறம் உடைய ராகாமையின், அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்யும் அறம் உடையனான அரசற்கு அவர் உவமையாகாமை தெரித்தார், 'கேள்' என்பது சொல்லால் அஃறிணையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/237&oldid=1577720" இலிருந்து மீள்விக்கப்பட்டது