உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv

மறைமலையம் - 6

சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943)

தமிழ்ப் பேராயம் (1959)

தமிழ்க்காப்புக் கழகம் (1961)

தனித்தமிழ்க் கழகம் (1964)

உலகத்தமிழ்க் கழகம் (1968)

தமிழியக்கம் (1972)

தமிழ்ச் சான்றோர் பேரவை (1998)

தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும்

L

பாவாணருமே!

L

தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை!

அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு ‘மறைமலையம்’ என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது.

இது!

பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம்

தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது!

அறிவுலகத்தால் 'மறைமலையம்’ வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். “தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்'

எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம்.

கோ. இளவழகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/25&oldid=1577079" இலிருந்து மீள்விக்கப்பட்டது