சாகுந்தல நாடகம்
(பாட்டு) சிறந்த மன்னவன்.
̄.......
.குகவே.
243
இதன் பொருள் : சிறந்த மன்னவன் - அறிவு ஆண்மை நடுநிலைமையில் மிக்கோனான அரசன், தன்குடிச் செல்வமே தெரிக - தன் குடிமக்களின் வளவிய வாழ்க்கையினையே தனது வாழ்க்கையாகத் தெரிவானாக!, விறந்த கல்விசால்
க
புலவர்சொல் வியந்திடப்படுக
-
செறிந்த கல்வி யறிவுமிக்க புலவரின் மொழிகள் எல்லாராலும் பாராட்டப் படுக!, நிறந்து வாழ் உமை கூறர் ஆம் நீலலோகிதர் - எல்லா உலகிலும் உயிரிலும் விளங்கித் தோன்றி வாழாநின்ற உமைப் பிராட்டி யாரைத் தமது இடப்பாகத்தே கொண்டவரான சிவபிரான், யான் பிறந்திடாவகை அருளி மேல் பேறு நல்குக மீண்டும் பிறவாதபடி அருள்செய்து அதன் மேல் தமது திருவடிப்பேற்றையும் எனக்குக் ப்பேற்றையும் எனக்குக் கொடுத்தருள் வாராக! என்றவாறு.ஏ: அசை; 'பேறு' என்பதில் உம்மை தொக்கது.
-
யான்
விறக்க' செறிந்த எனப் பொருள்படுதலை “விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவே” என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்திற் காண்க (உரியியல், 51). செறிந்த கல்வியுடைய ராதலாவது பன்னூல்களையுந் துருவி யாராய்ந்தறிந்த அரும்பொருள்களைத் தம்முளத்தே நெருங்கப் பொதிந்து வைத்தவராய்த் திகழ்தல். அம்மை அருள் வடிவினளாய் எல்லாவிடங்களிலும் உயிர்களிலும் நிறைந்து நின்று அவற்றை ஆக்கியுங் காத்தும் வரும் ஓவா நிகழ்ச்சி உணர்ந்து நோக்குவார்க்கெல்லாம் புலனாய் நிற்றலின் ‘நிறந்துவாழ்' என அடைகொடுக்கப்பட்டாள். 'நீலலோகிதர்’ நீலநிறமுஞ் சிவப்பு நிறமுந் தன்கட் டோன்றுஞ் சிவபிரான்; லோகிதம் சிவப்புநிறம். அம்மை நீரின் றன்மைய ளாகலின் நீலநிறமும், அப்பன் நெருப்பின் றன்மையனாகலிற் செந்நிறமும் உடையர். அம்மையும் அப்பனும் பிரிவின்றி ஒருங்கு விராய் நிற்றலின் அவர் நிறம் இரண்டுங் கலந்த 'நீலலோகிதர்' என்னும் பெயர் கடவுட்கு வழங்கலாயிற்று. இக் கடவுள் நிலையின் உண்மையின் விரிவு யாமியற்றிய சைவசித்தாந்த ஞானபோதம். சிவஞானபோத ஆராய்ச்சி, திருவாசக விரிவுரை, மாணிக்க