உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

255

கருதுவார் கூற்றை மறந்து, மாயாவாதம் என மணிவாசகர் குறித்தது புத்தமதத்தையே எனத் தெளிவு செய்கிறார் அடிகளார்.

66

‘அடிகள் காலத்தில் 'மாயாவாதம்' என்னுஞ் சொல் ‘புத்த சமயத்தை’யே உணர்த்தியதென்பது 'வாமன் சி. ராமம்” என்பவர் எழுதிய 'வ 'வடமொழியகராதி'யிலும் குறிக்கப் பட்டிருக்கிறது. முதலிற் புத்த சமயத்திற்கும் பெயராய் வழங்கிய மாயாவதம் என்னுஞ்சொல், அப் புத்த சமயம் ஒடுங்கி, அதனோடொப்பதாகிய ஏகான்மவதாம் தலையெடுத்துப் பரவத் துவங்கிய பின் அதற்கும் பெயராய் வழங்கலாயிற்று. தமக்கு முற்றொட்டேயிருந்த இவ் 'வேகான்மவாத மாயா வாதத்தை’ச் சைவத்துறவி வேடம் புனைந்து கொண்டு சங்கராசாரியார் இவ்விந்திய நாடெங்கணும் பரப்பியபின், அச் சால் முதலிற்றான் உணர்த்திய புத்தசமயப் பொருளை இழந்து, ஏகான்மவாதப் பொருளைப் பெறுதலாயிற்று. ஆகவே, இக்காலத்தில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டில் 'மாயா வாதம்' என்னுஞ்சொல் ஏகான்மவாதத்தின் மேற்றாய்க் குறிக்கப்பட்டிருத்தல் பற்றி ஈண்டைக் காவதோர் இழுக்கில்லை. அதனால் அடிகள் சங்கராசாரியாருக்குப் பிற்பட்டவராதலுஞ் செல்லாது. அடிகள் காலத்து வழங்கிய மாயாவாதமும், சங்கரர் காலத்து வழங்கிய மாயாவாதமும் வெவ்வேறாதல் கண்டு கொள்க" (பக். 299) எனத் தெளிவுறுத்தி, மாயாவாதம் என்னும் சொற்றொடர், ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்நூல்களில் எங்கும் காணப்படவில்லை என்பார் கூற்றினையும் மறுத்து, ஆறாம் நூற்றாண்டினதாகிய திருமந்திரத்தின்கண் ‘ஐயைந்து மாயாவாதிக்கே’ என வருவதை

எடுத்துக் காட்டியிருக்கிறார்.

L

இலக்கிய வரலாற்றுத் திறனுக்கு உதவும் அடிகளாரின் அரசியல் வரலாற்று அறிவு:

தமிழகத்தில் சீரும் சிறப்புமாய்ச் செங்கோல் ஓச்சியிருந்த பல்லவர் பற்றிய பற்றிய குறிப்பு, மணிவாசகர் பாடல்களில் ல்லாமையால், அவர் பல்லவர் காலத்திற்கு முற்பட்டவர் எனத் தெளிவு செய்கிறார் அடிகளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/286&oldid=1577770" இலிருந்து மீள்விக்கப்பட்டது