உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் 6

வழங்கி வந்தவாறு போல, இஞ்ஞான்றைத் தமிழரும் தமிழ் மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும்.

தமிழ்மொழி கற்கும் தமிழ் இளைஞர் ஒவ்வொருவரும், அவர் தமக்குத் தமிழ் கற்பிக்குந் தமிழாசிரியர் ஒவ்வொருவரும் வடமொழி முதலான பிறமொழிச் சொற்களைத் தமிழின்கண் வந்து நுழையாதபடி அறவே விலக்கி, இப்போது வழங்காமற் பழைய தமிழில் வழங்கிய சொற்களையே மீண்டும் எடுத்து வழங்கித் தமிழை வளம்படுத்துப் பாதுகாக்கக் கடவராக.

L

6

திருவள்ளுவர் காலம் வரையில் மிகவுந் தூயதாய்ச் சுடரொளி விரிந்து திகழ்ந்த தனித் தமிழ் ஞாயிறு அதற்குப் பின்னர்த்தாகிய வ் விடைக் காலத்தில் உண்டான வடமொழிக் கலவையாகிய மூடுபனியால் தனது தூய பேரொளி சிறிது சிறிதே மங்கித் தோன்றியதாயினும், அப்பனியினைத் தமது பேரொளி வெப்பத்தால் உரிஞ்சித் தனதியற்கை யொளி குன்றாமலே விளங்கி இலங்கியது.

பிற்காலத்தில் புதிய புதியவாகத் தமிழிற் புகும் கொள்கை களெல்லாம் தமிழுக்கு உரியனவுமல்ல. தமிழை வளர்க்க வந்தனவுமல்லை. அவைகளெல்லாம் தமிழை வளர்க்க வந்தனவல்ல வென்பதற்கு அக்கொள்கையினை உடையார் வடமொழி முதலான பிறமொழிச் சொற்களை அதனுள் வரைதுறையின்றிப் புகுத்தி, ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொற்களை வழங்க விடாமற் செய்த கொடுமையால் நன்றாக அறியலாம்.

ஆடிப்பெருக்கிற்கும்

நம் பண்டை ஆசிரியர் இயற்றியருளிய நூல்களிற் செல்லுக்கும் ரையாய்ப்போன எண்ணிறந்த நூல்கள்ஒழிய எச்சகமாக இஞ்ஞான்று நாம் நம் கைகளில் ஏந்தி ஏந்தி மகிழுந் தொல்காப்பியம், பரிபாடல், றையனாரகப் பொருளுரை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,பத்துப்பாட்டு, திருக்குறள் முதலான அருந்தமிழ் நூல்களைச் சிறிதாயினும் உற்று நோக்குவமாயின் நம் பழைய பேராசிரியர் நம் ஆருயிர்த் தமிழ் அன்னையை எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/289&oldid=1577773" இலிருந்து மீள்விக்கப்பட்டது