* பின்னிணைப்பு
277
5. வழிபாட்டு மொழி
திருக்கோயில்களிற் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றும் காலங்களில், இச் செந்தமிழ் மந்திரங்களே கூறற்பாலனவாம். வை கூறி வழிபாடு ஆற்றின், இவற்றை ஓதுவார்க்கும், அருகிலிருந்து கேட்பாருக்கும் சிவபிரான்மாட்டு மெய்யன்பு நிகழும். இவற்றை விடுத்து ஓதுவோர்க்கும் கேட்போர்க்கும் பெரும்பாலும் பொருள் தெரியாத பிறமொழிச் சொற்றொடர் களை மந்திரங்கள் ஆக்கிப் புகலுதல் கரும்பிருக்க அதனை விடுத்து வேம்பு நுகர்ந்து எய்த்தலோடு ஓக்கும்.
றைவனுக்கு தேவார
நந்தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் வழிபாடு ஆற்றுங் காலங்களில் ஓதுதற்குத் திருவாசகங்களும் நாலாயிரப் பிரபந்தங்களும் இருக்கின்றன. வ்வருள் நூல்களால் நுவலப் படுந் திருக்கோயில்களுக்கே எல்லாச் சிறப்பும் தெய்வத் தன்மையும் உளவன்றி ஏனையவற்றிற்கு அவை இல்லாமை, நம் இந்துக்கள் இனிது உணர்ந்த ஒரு பேருண்மையாகும்.
ட
கடவுளை நேரே கண்டு அவனருளால் பல செயற் கருந்தெய்வ வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்து காட்டி இறைவனருளை நாம் எளிதிற் பெறுமாறு செய்த, அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான தெய்வ அருளாசிரியர்களும், பொய்கையாழ்வார், பேயாழ்வார் முதலான உண்மை அடியார்களும் அருளிச் செய்த செந்தமிழ்ச் செழும் பாடல்களே நம் நெஞ்சை நெகிழ்வித்து நம்மை இறைவன்பால் உய்க்குமன்றி அருள்பெறாத ஏ ே பிறமொழியில் ஆக்கிய உரைகள் நம்மை இறைவன்றன் பேரருளுக்கு உரியராக்க மாட்டா. ஆதலால் இனியேனும் நம் தமிழ் மக்கள் ஏமாந்து கிடவாமல், தேவார திருவாசகம் முதலான செந்தமிழ் மாமறைகளை எல்லாரும் அறிய நெஞ்சம்
னார்