* பின்னிணைப்பு
283
காலையும் புலாலுணவும் மறுத்து ஓதல், வேட்டல், அரசு புரிதல், வாணிகஞ் செய்தல், உழவு நடாத்தல் என்னும் உயர்ந்த தொழிற்கண் நிலைபெற்று நின்றோர் 'மேலோர்' எனவும், அவர்தம் ஏவல் வழி நின்று, அக் கொலையும் புலையும் நீக்காமற் பெரும்பாலும் கைத்தொழில் செய்யும் அவ்வளவில் நின்ற ஏனை வகுப்பினர் 'கீழோர்' எனவும் இரு பெரும் பிரிவில் வகுக்கப்பட்டு, அவரவரும் அறிவாலும், ஒழுக்கத்தாலுந் தாழிலாலுந் தத்தமக்குள்ள உயர்வு தாழ்வுகளை நினைந்து, கீழோர் மேலோர்க்கு அடங்கி நடக்கவும் மேலோர் தங்கீழ் வாழுங் குடிமக்களை இனிது பாதுகாத்து வரவும், இவ்வாறு மிகவும் அமைதியாகவும் ஒழுங்காகவும் பண்டைத் தமிழ் மக்கள் வாழ்க்கை இனிது நடைபெறலாயிற்று.
கல்வி வல்ல புலவர்களை இல்லாத நாடும் அரசுங் கானகத்தை யும் அதில் உலவுங் கோளரியையுமே ஒக்கும். அறியாமை இருளை அகற்றி அறிவொளி பரப்பி அன்பையும் அறத்தையும் இன்பத்தையும் பெருகச் செய்யும் புலவர் குழுவினையுடைய நாடே விண்ணவர் உறையும் பொன் நாட்டினை யொப்பதாகும்.
பிறப்பளவில் உயர்வு தாழ்வு பாராட்டும் பேதமைச் செயலை அறவே ஒழித்திடுமின்கள்.
அந்தக் காலத்தில் பொருள் மிகுதியாகத் தந்து என் கொள்கை களை மாற்றிக் கொள்ளும்படி நேயர்களிலே பலர் என்னை வேண்டினார்கள். பட்டங்களும் பதவியும் தந்து உதவுவதாகச் சொன்னார்கள். அதென்னவோ அவற்றி லெல்லாம் எனக்கு விருப்பமில்லை! இப்பொழுதும் பட்டம் பதவி பெற வேண்டும் என்ற விருப்பம் எனக்கில்லை. யான் அறிந்த உண்மையை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தொண்டின் வாயிலாக என் உயிரைத் தூய்மை செய்து காள்ள விரும்புகிறேன். அங்ஙனமே செய்து வருகிறேன். கனவிலும் நினைவிலும் தமிழையும் சைவத்தையும் எண்ணி வருகிறேன். இன்னும் யான் இப்படியே எண்ணி வர இறைவன் அருள் செய்வானாக.