உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

285

கற்பொழுக்க மாட்சி வாய்ந்த இல்வாழ்க்கையின் சிறந்த பயனாவது நன்மக்களைப் பெற்று அவர்களைப் பல நலங்களும் வாய்ந்தவராக்கி அவர் தமக்கும் பிறருக்கும் பயன் பயன்பட் டொழுகச் செய்தலாம்.

ஆறறிவுடைய மக்கட் பிறவியெடுத்த உயிர்கள் தாம் பெற்ற வ் அரிய பிறவியிலேயே விரைந்து தூயராய் இறைவன் திருவருளின்பத்தைப் பெறுதற்கு இன்றியமையாது செயற் பாலன; தம் மன மொழி மெய்கள் ஒன்றினொன்று முரணாமல் தமக்கும் பிறர்க்கும் பிறவுயிர்க்கும் நலம் பயப்பனவற்றையே ஒருமுகமாய் நாடி நிற்குமாறு பழகுதலும், துன்பத்திற் கிடனின்றி இன்பத்தையே ஓயாது தருங் கல்வி கேள்விகளிலும், தமது அறிவை நிலைப்பித்தலும், இறைவன்றன் பேரருட்டிறத்தை நினைந்து நினைந்துருகுதலும் மென்பதூஉந் தமிழ்ப் பேரறிஞர் கண்டறிந்த தாகும்.

தவ

முயற்சியிலுந்

யாம் எழுதும் நூல் ஒவ்வொன்றும் பன்னாளும் பல முறையும் ஆய்ந்தாய்ந்து எழுதப்படுவது. யாம் எழுதுவன எமதுளத்திற்கு இனிமை தரும் வரையில், எமதறிவிற்குப் பொருத்தமாகக் காணப்படும் வரையில் அவற்றைப் பன்முறையும் நினைந்து நினைந்து விரையாமல் மெல்லென எழுதுதலே எமக்கு வேரூன்றிய இயற்கையாய் விட்டது.

ஆடவரும் மகளிரும் முதுமை எய்தாமல் நீண்ட காலம் ளமைச் செவ்வியுடன் இனிது வாழ்தற்கு, அவர் தம்மில் எஞ்ஞான்றும் அன்பினால் அகங்கெழுமிக் குளிர்ந்த முகனும், ழைந்த சொல்லுங் குழைந்த நடையும் வாய்ந்து மாறின்றி ஒழுகுதலே யாம் என்பது போதரும்.

விழுமிய தமிழ்ப் பழைய நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே, செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமதிளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று.

எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டில் பெரும்பாலும் நிரம்பிய தென்னலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/316&oldid=1577800" இலிருந்து மீள்விக்கப்பட்டது