உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

11

எல்லாப் பக்கங்களிலும் எப்படித் தோன்றுகின்றார்கள்! இனி, ப்பொழுது இவர்களை எந்த நாடகத்தினால் மகிழச் செய்யலாம்?

ச்

நடி : ஓ! சாகுந்தலம் என்னும் புதிய நாடகத்தை நடப்பித்துக் காட்டல் வேண்டுமெனத் தாங்கள் சற்று முன்னரே கட்டளையிட்டிருக்கின்றீர்களன்றோ?

சூத்திரதாரன் : ஆ! என் அன்பே, நன்கு நினைப்பூட்டப் பட்டேன்; இவ்விடத்தே துஷியந்த அரசன் துள்ளியோடும் புள்ளிமான் பின்னே செல்வதுபோல, யானும் இன்புறுத்தும் நின் இசைப்பாட்டின் இன்னிசையால் வலிந்து இழுக்கப்பட்டுச் சென்று அதனை முற்றும் மறந்தேன் கண்டாய்!

இருவரும் போகின்றார்கள்)

முன்னுரை முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/42&oldid=1577097" இலிருந்து மீள்விக்கப்பட்டது